பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 273 போய நாள் நாக பாசம் பிணித்தது போன வாறும் நீ, அமா நினையாய்! மாள நினைத்தியோ! நெறியிலா ரால் ஆயமா மாயம்; ஒன்று அஞ்சலை அன்னம் அன்னாய்!” என்றும், 'கண்ட அக்கனவும், பெற்ற நிமித்தமும், நினது கற்பும் தண்டவாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும் அண்டர் நாயகன் தன்வீரத் தன்மையும், அயர்த்தாய் போலும் புண்ட ரீகற்கும் உண்டோ இறுதி, இப்புலையர்க்கு அல்லால்' என்றும், 'மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே ஆருயிர் நீங்கல்; நின்பால் கற்புக்கும் அழிவுண்டாமோ? சீரியது அன்று இது ஒன்றும்; திசை முகன் படையின் செய்கை; பேரும் இப்பொழுதே, தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ?” என்றும் சீதையின் கற்பின் வலிமையை எடுத்துக் கூறினாள் திரிசடை என்னும் நல்லாள். திரிசடையின் ஆறுதல் மொழிகளைக் கேட்டுச் சீதை சற்று அமைதியானாள். மாயச் சீதை அனுமன் வடதுருவம் சென்று சஞ்சீவி மலையை எடுத்து வந்தான். மாண்டவர் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். இதைக்