பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 275 இந்திரசித்தன் அயோத்திக்குப் படையெடுத்துச் செல்வதாகக் கேட்ட செய்தியை வைத்தும் இராமன் தன் உறவினர்களுக்காக வருந்தினான். இருவரும் அயோத்தி செல்லத் தீர்மானித்தனர். அப்போது வீடணன், "பத்தினி தன்னைத் தீண்டிப், பாதகன் பகுத்த போது, முத்திறத்து உலகம் வெந்து சாம்பராய் முடியும் அன்றே! இத்திறம் ஆன தேனும், அயோத்தி மேல் போன வார்த்தை சித்திரம்; இதனை யெல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின்’ என்று கூறி விட்டு 'நான் போய் உண்மையை அறிந்து வருகிறேன் சற்றுப் பொருங்கள்’ என்று தெரிவித்து விட்டு ஒரு வண்டு வடிவத்தில் நகருக்குள் சென்று திரும்பிச், சீதை இருக்கிறாள். இந்திரசித்தன் நிகும்பலைக்குச் செல்வதற்காக இந்த மாயத்தைச் செய்திருக்கிறான். 'இருந்தனள் தேவி; யானே எதிர்ந்தனன் கண்களால்; நம் அருந்ததி கற்பினாளுக்கு அழிவுண்டோ? அரக்கன் நம்மை வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான்; முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான்' என்று உண்மைச் செய்தியை அறிந்து வந்து கூறினான். பின்னர் வீடணனுடைய வேண்டுகோளின் பேரில் இராமனுடைய அனுமதியைப் பெற்று, இலக்குவன், வீடணன், அனுமன் ஆகியோர் மேலும் சில வாணர வீரர்களுடன் நிகும்பலைக்குச் சென்று இந்திர சித்தனுடைய வேள்வியைச் செய்யவிடாமல் தடுப்பதற்குப் புறப்படத் தயாராயினர். இராமன், இலக்குவனுக்கு மேலும் தேவைப் படும் படியான தற்காப்பு மற்றும் தாக்குதல் படைகளைக் கொடுத்து ஆசி கூறி வழி அனுப்பி வைத்தான்.