பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 276 >}=== காதலும் பெருங்காதலும் இலக்குவனும், வீடணன் அனுமன் ஆகியோருடன் நிகும்பலைக்குச் சென்று இந்திரசித்தனுடைய யாகத்தைத் தடுத்து அவனை விரட்டினர். மூலப்படை இந்திரசித்தன் போர்க் களத்தில் இலக்குவன் கணையால் மாண்டான். இராவணன் வேறு துணை யாருமின்றித் தனியாக இருந்தான். போரைத் தொடருவதற்குத் தனது மூல பலப்படையைத் திரட்டினான். மூல பலப்படைத் தலைவர்களில் முக்கியமான ஒருவன் வன்னி. அவன் நடந்த விவரங்களைக் கேட்டான். அப்போது மாலியவான் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எடுத்துக் கூறி, 'இது இயற்கை; ஒர் சீதை என்று இருந்தவத்து இயைந்தாள் பொது இயற்கை தீர் கற்புடைப் பத்தினி பொருட்டால் விதி விளைந்தது; அவ்வில்லியர் வெல்க; நீர் வெல்க முது மொழிப்பதம் சொல்லினேன்; என்று உரை முடித்தான்” இராவணன் வீழ்ச்சி இராவணன் போர்க்களத்தில் இராகவனுடைய கணையால் மாண்டான். மாண்டு கிடந்த அவனுடைய முகங்கள் மும்மடங்கு பொலிந்து கம்பிரமாகக் காட்சியளித்தன. அக்காட்சியை இராமனும் இதர வீரர்களும் கண்டனர். வேத விதி முறைகளின் படி அவனுக்கு இறுதிக் கடன்கள் செய்யுமாறு வீடணனிடம் கூறினான். வீடணன், இராவணனுடைய உடல் மீது விழுந்து அழுது புரண்டான். வீடணனுக்குத் தன் அண்ணன் மீது இருந்த மிகுந்த மரியாதை காரணமாக அவனுடைய பெருமைகளை நினைந்து வருந்திப் புலம்பினான். “போர் மகளைக் கலை மகளைப் புகழ் மகளைத் தழுவிய கை பொறாமை கூரச் சீர்மகளைத் திருமகளைத் தேவர்க்கும் தம் மோயைத் தெய்வக் கற்பின்