பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசினிவாசன் 279 'கற்பினுக்கு அரசினைப் பெண்மைக் காப்பினைப் பொற்பினுக்கு அழகினைப் புகழின் வாழ்க்கையைத் தற்பிரிந்து அருள் புரிதருமம் போலியை அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான்' 'கணங்குறு துணை முலை மூன்றில், தூங்கிய அணங்குறு நெடுங்கணிர் ஆறுபாய் தர வணங்கு இயல் மயிலினைக் கற்பின் வாழ்வினைப் பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா' இவ்வாறு இராமன் சீதையைப் பார்த்து அனைவரும் அறியப் பேசியதைக் கம்பன் மிக உருக்கமாக நமக்கு எடுத்துக் கூறுகிறார். சிதை தீப்புகுந்து வெளியேறுகிறாள் இங்கு ஒரு அற்புதமான காட்சியைக் கம்பநாடர் நமக்குக் காட்டுகிறார். இதைப் படிக்கும் போது நமது உடம்பு புல்லரிக்கிறது. கண்கள் கலங்கு கின்றன. உள்ளம் உலுங்குகிறது. பெண்மையின் பெருமையை கம்பன் உலகின் உச்சிக்குக் கொண்டு செல்கிறார். சீதையைக் கண்ட இராமன் 'பெண்மையும், பெருமையும் பிறப்பும் கற்பு எனும் திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும் உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால் வண்மையில் மன்னவன் புகழின் மாய்ந்ததால், 'யாது யான் இயம்புவது? உணர்வையிடறச் சேதியா நின்ற நின் ஒழுக்கச் செய்தியால்; சாதியால்; அன்று எனில் தக்கது ஒர்நெறி போதியால்; என்றனன் புலவர் புந்தியான்” என்று கூறி என் கடமை முடிந்து விட்டது, எனவே தக்க ஒரு நெறியில் நீ போவாயாக’ என்று இராமன் கூறினான். இராமன் கூறிய இச் சொற்களைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சீதை, எந்தவித கலக்கமும் இல்லாமல்,