பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் XXV ] ] 'இந்திரற்கு இந்திரன், எழுதல் ஆகாச் சுந்தரன்; நான் முகன் மரபில் தோன்றினான்; அந்தரத்தோடும் எவ்வுலகும் ஆள்கின்றான் மந்திரத்து அருமறை வைகும் நாவினான்’ என்றும். 'ஈசன் ஆண்டிருந்த பேர் இலக்கு மால் வரை ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான், ஆசைகள் சுமந்த பேர் அமரியானைகள் பூசல்செய் மருப்பினைப் பொடி செய்தோளினான்' என்று பெருமை பேசுகிறான். இராமனுடன் நடந்த முதல் நாள் போரில் தோல்வியடைந்த இராவணன் அனைத்தையும் இழந்து வெறுங்கிையோடு இலங்கை திரும்பியதைக் கம்பன் கூறுகிறான். 'வாரணம் பொருதமார்பும், வரையினை எடுத்த தோளும் நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்தநாவும், தாரணி மவுலிபத்தும், சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போக்கி வெறுங்கையோடு இலங்கை புக்கான்' என்பது உலகப் புகழ் பெற்றக் கம்பன் கவிதையாகும். கும்பகருணன் அறிவுரை கூறிய போது இராவணன் கோபம் கொண்டு 'மானுடர் இருவரை வணங்கி, மற்றும் அக் கூன் உடைக்குரங்கையும் கும்பிட்டு, உய்தொழில் ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன் யான் அது முடிக்கிலேன் எழுக போகென்றான்' என்றும் தன் மானமும் வீரமும் பேசினான். இந்திரசித்தன் நிகும்பலை யாகத்தை முடிக்க முடியாமல் இலக்குவனிடம் தோல்வியடைந்து திரும்பி வந்து தனது தந்தையிடம் 'எல்லா மாயங்களும் செய்து வலுவான போர்கள் நடத்தியும் அவர்களை வீழ்த்த முடியவில்லை, குலம் செய்த பாவத்தாலே கொடும் பழி தேடிக் கொண்டாய், ஆசை தான் அச்சீதை பால் விடுவை யாயின் அனையவர் சீற்றம் தீர்வர், போதலும் புரிவர், செய்த தீமையும் பொறுப்பர்” என்று கூறினான்.