பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் = 282 இங்கு சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பைக் கற்பின் பெருமைய, கற்பின் துய்மையை உறுதியை எடுத்துக் காட்டி Զ_5ն)ԵE முழுவதுமே சாட்சியமாக நிற்கிறது. பஞ்சபூதங்களும், அக்கினி தேவனும் நான்முகனும், சிவ பெருமானும், தசரதனுமே வந்து சீதையின் கற்பின் பெருமையை எடுத்துக் கூறி நிற்கின்றனர். அனைவரும் அயோத்தி திரும்பினர் இராமனுடைய வனவாச காலம் முடிந்தது. இராமன் சீதையுடனும் இலக்குவனுடனும் விமானத்தினருகில் வந்து அனைவரும் இளைப்பாறும் படி கேட்டுத் தானும் புறப்பட்டான். அனைவரும் விமானத்தில் ஏறினர். விமானம் இலங்கையைச் சுற்றி வட்ட மிட்டு விட்டுக் கடலையும் பல மலைகளையும் ஆறுகளையும் கடந்து கிட்கிந்தை சென்றது. அங்கிருந்து பரத்துவாசர் ஆசிரமத் திற்குப் சென்றது. அங்கு இளைப்பாறி விட்டு இராமனும் மற்றவர்களும் விமானத்தில் நந்திக் கிராமம் சென்றடைந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்தனர். கம்பனுடைய மகா காவியத்தின் சிறப்பு, சீதையின் தலை சிறந்த மாசு மறுவற்ற உறுதி மிக்க மிக உயர்ந்த கற்பு நிலையாகும். வால் மீகியின் சீதையைக் காட்டிலும் கம்பனுடைய சீதை மிக உயர்வான கற்பு நிலையின் உயர்வை சிறப்பை வலுவை எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். சீதை, ஜானகி, மைதிலி, வைதேகி என்னும் பெயர்களும் இராமனுடன் சேர்த்து சீதாராமன், ஜானகி ராமன், சீதாபதி என்னும் பெயர்களெல்லாம் பாரத பூமியில் உள்ள அனைத்து இல்லங்களிலும் பதிந்துள்ள குடும்பப் பெயர்களாகும். நமது பாரத பூமியின் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் இணைந்துள்ள இஷ் தெய்வங்களாகும். கம்பன் தனது மகா காவியத்தில் பெண்மையை மிகவும் சிறப்பித்துக் காட்டுவதில் சீதா பிராட்டித் தனி இலக்கணமாக அமைந்துள்ளதைக் காண்கிறோம். பெண்ணாசை, பெருங்காதல், ஒரு தலைக் காமம் பால் உணர்வின் பல பரிமாணங்கள் அவைகளின் வெளிப்பாடுகள் அதன்