பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் xxix கும்பகருணன் மடிந்தான். இந்திர சித்தனும் போர்க்களத்தில் இறந்து பட்டான். மூல பலப்படையும் அழிந்தது. இராவணப் பெயரான் தனியே நின்றான் இராமனை எதிர்த்து இறுதிப் போரில் களத்தில் நின்றான். இராவணன் விடுத்த கணைகள் அனைத்தையும் இராமன் தடுத்து விட்டான். இராவணனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இந்த அதிசய மனிதன் இந்த இராமன் யார் என்று சிந்திக்கிறான். 'சிவனோ அல்லன், நான் முகன் அல்லன், திருமாலாம் அவனோ அல்லன், மெய் வரம் எல்லாம் அடுகின்றான்; தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்; இவனோ தான் அவ்வேத முதற் காரணன்?’’ என்று எண்ணுகிறான். 'யாரேனும் தான் ஆகுக, யான் என் தனியாண்மை பேரேன்; இன்றே வென்றி முடிப்பென்; பெயர்கிலேன்; நேரே செல்வென்; கொல்லும்; அரக்கன் நிமிர் வெய்தி வேரே நிற்கும் மீண்கிலன் என்னா விடல் உற்றான்” என்று தனியாண்மை கூறி சரங்களைத் தொடுத்தான். இராவணன் தொடுத்த அத்தனை சரங்களையும் தடுத்து இராமன் தனது கணைகளால் இராவணனைப் போர்க்களத்தில் வீழ்த்தினான். இராவணன் போர்க்களத்தில் கம்பீரமாக வீழ்ந்து கிடந்த காட்சியைக் கம்பன் மிக அற்புதமாகக் காட்டுகிறார். 'முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்தவரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி' என்றும், 'வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வியத், தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க, மயல் அடங்க, ஆற்றல் தேயத்