பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—l கம்பநாடன் காவியத்தில் ==> காதலும் பெருங்காதலும் XXIX தம்மடங்கு முனிவரையும் தலையடங்கா, நிலையடங்கச் சாய்ந்த நாளின் மும்மடங்கு பொலிந்தன, அம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா!' என்று இராவணன் வீழ்ந்து கிடந்த கம்பீரத்தைக் கம்பன் மிகவும் அற்புதமாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு கம்ப நாடர் தனது பெருங்காவியத்தில் எந்தக் பொருளை எடுத்துக் கொண்டாலும் எந்தப் பாத்திரத்தின் செயல்பாட்டை எடுத்துக் கொண்டாலும் அதன் முழுமையான பொருளையும் முழுமையான வடிவத்தையும் காட்டுவதைக் காண்கிறோம். இந்த நூலில், பெண்கள் பால் வைத்த நேயம் பெண்ணாசை பெண்ணாட்டம் ஒரு தலைக்காமம், பெருங்காதல், மறுபக்கம் ஆண்பெண் நல்லுறவு, மனைமாட்சி, ஒருத்திக்கு ஒருவன் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நெறிமுறை, அன்பு, காதல், கற்பு நிலை முதலியவை பற்றியும், புலனடக்கம் பற்றியும், தசரதன் கைகேயி, இராமன் சீதை சூர்ப்பனகை, வாலி, இராவணன் ஆகியோர்களின் உணர்வு நிலை, இலக்குவன் அனுமன், வீடணன், பரதன் ஆகியோரின் பக்தி ஆகியவை பற்றியும் காவியத்தின் நிகழ்ச்சிகளில் காண்கிறோம். பெண்ணுருக்கொண்ட பெற்றியளன தாடகையை எதிர்த்து இராமன் நடத்திய கன்னிப் போர், அகலிகை கல்லானது, இந்திரன் பெற்ற தண்டனை ஆகிய சிறியனவானாலும் முக்கியமான நிகழ்ச்சிகள் காவியத்தில் கூறப்படுகின்றன. அவைகள் பற்றி இந்த நூலிலும் பேசப்படுகிறது. இராமனும் சீதையும், ரீமன் நாராயணனும் இலட்சுமியுமாக பாற்கடலில் இருந்து பிரிந்து வந்த பின்னர் மிதிலையில் சந்திக்கின்றனர். இருவரும் ஒருவரையொருவர் மாறி மற்றவர் இதயத்தில் புகுந்து கொண்டதும், அன்பு கொண்டதும் காதல் கொண்டதும், திருமண மானதும், சேர்ந்து வாழ்ந்ததும் இருவரும் இதர பரிவாரங்களுடன் மிதிலையிலிருந்து அயோத்தி சென்றதும் இந் நூலில் பேசப்படுகிறது. இதில் இராமனுக்கும் சீதைக்கும் இடையிலான தெய்வீகக் காதலையும் காதல் உணர்வுகளையும் கம்பன் மிகவும் நுட்பமாக வடித்துக் கூறுவதைக் காண்கிறோம்.