பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் xxxi அயோத்தியில் கூனியும் சிறிய கோத்தாயும் தலையிடக் காதல் முதிரக் கருத்தழிந்த தசரத மன்னன் கொடுத்த வரங்களால் இராமன் முடிசூடுவது தடைபட்டு வனம் செல்வது பேசப்படுகிறது. வனத்தில் செல்லும் காலத்தில் வனங்களின் அழகிய காட்சிகள், செடிகள் கொடிகள், மரங்கள், மலர்கள் அதன் மணம், காய், கனிகள், ஆறுகள், மலைகள், நீர் வீழ்ச்சிகள், நீரோட்டங்கள், நீருற்றுகள் சுனைகள், வனவிலங்குகள், பறவைகள் இவைகளை இராமன் சிதைக்குக் காட்டுவதும் அதைக் கண்டு இருவரும் வனத்தில் மகிழ்ச்சியுடன் மனம் ஒன்றி வாசம் செய்ததும் இந்நூலில் பேசப்படுகிறது. சூர்ப்பனகை தோன்றுதல், அவளுடைய வேடம் ஒருதலைக் காமம், அவள் படும் பாடு, அவள் தனது முயற்சிகளில் வெற்றி பெறாததால் இராவணனிடம் சென்று அவனுடைய உள்ளத்தில் சீதையின் பாலான காம உணர்வை, பெருங்காதல் உணர்வை உண்டாக்கி அவனும் அதே சிந்தனையில் சீதையை மனச்சிறையில் வைத்து சீதையைக் கவர்ந்து செல்வதற்கு எடுக்கும் முயற்சிகள், மாய மான் தோன்றுதல் அதைப் பிடித்துக் கொடுக்கும்படி சீதை இராமனிடம் வற்புறுத்துதல் இலக்குவன் இது மாய மான் இதில் சூது அடங்கியுள்ளதாகக் தெரிகிறது என்று எச்சரித்தும் இராமன் சீதையின் பாலுள்ள காதல் மிகுதியால் மானைப்பிடிக்க அதன் பின் ஒடுதல் இலக்குவன் இராமனைத் தேடிச் செல்லுதல், இராவணன் துறவி வேடம் கொண்டு, சீதையைச் சிறையெடுத்தும் அவளை இலங்கைக்குக் கொண்டு செல்லுதல், ஆகியவை அதில் கம்பனுடைய மிக நுட்பமான கவிதைகள் கவிதை நயங்கள் ஆகியவை இந்த நூலில் பேசப்படுகின்றன. இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடிச் செல்லுதல், இடையில் நிகழும் இடையூறுகள், சீதையை நினைந்து இராமன் வருந்துதல் கிட்கிந்தை அருகில் சுக்கிரீவன் அனுமன் ஆகியோரை சந்தித்தல், அவர்களுடன் நட்பு கொள்ளுதல், மனையின் மாட்சியை அழித்த வாலியை இராமன் வதம் செய்தல், இந்த நூலில் பேசப்படுகின்றன. சுக்கிரீவனுடன் சேர்ந்து சீதையைத் தேடுவதற்கு ஏற்பாடு செய்தல் அனுமன் சீதையைத் தேடி இலங்கை செல்லுதல் அனுமனுடைய அருஞ்செயல்கள், சீதையைக் காணல் அவளிடம் இராமனைப் பற்றிய செய்திகளைக் கூறுதல், கணையாழியைக் கொடுத்து