பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் XXX|| சூளாமணியைப் பெறுதல், சீதையின் சிறப்புகள், அனுமனின் துதுச் சிறப்புகள் இராவணனைச் சந்தித்தல், இலங்கை தகனம், ஆகியவைகள் அதில் சீதை இராமன் ஆகியோரின் உணர்வு நிலைகள், சீதையின் கற்பின் சிறப்புகள் ஆகியவை பற்றி இந்நூலில் பேசப்படுகிறது. இராவணனுடைய காமப் பெருநோய் பெருங்காதல், மாலியவான், கும்பகருணன், வீடணன் ஆகியோரின் அறிவுரைகள் இராவணன் செய்த வாக்கு வாதங்கள், இராவணனுடைய உள்ளத்தில் அவனுடைய காமத்திற்கும் கோபத்திற்கும் இடையிலான மோதல்கள் முதலியவை பல கட்டங்களிலும் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் ஆகியவை இந் நூலில் மிகவும் நுட்பமாகப் பெசப்படுகின்றன. வீடணன் சரணாகதி, இராமன் வானரப்படைகளுடன் கடலைக் கடத்தல், இலங்கையை முற்றுகையிடுதல் இராம, இராவணப்போர் அதிகாயன் கும்பகருணன் இந்திர சித்தன் ஆகியோர்களுடைய கடும் போர்கள் இராவணன் சீதையின் மனதை மாற்றுவதற்கு எடுத்த பல முயற்சிகளும் இங்கு பேசப்படுகின்றன. இராவணனுடைய பிடிவாதம் இராம இராவண இறுதிப் போர் இராவணனுடைய வீழ்ச்சி, சீதையின் விடுதலை, சிதையின் கற்பின் சிறப்பு, ஆகியவைகள் இந் நூலில் சிறப்பாக இடம் பெறுகின்றன. தொகுப்புரையாக பெண்ணாசை, பெண்கள் பால்வைத்த நேயம், பெருங்காதல் ஆகியவை பற்றியும் இந்நூலில் சிறப்பாகத் தொகுத்துக் கம்பநாடருடைய கருத்துக்கள் விவரிக்கப்படுகின்றன. கம்பன் கூறும் அறநெறிகள் ஒழுக்க நெறிகள் புலனடக்கம், மனைமாட்சி ஆகியவை பற்றிய பல கருத்துக்களும் இந்நூலில் மிகவும் சிறப்பாக இடம் பெறுகின்றன. இந்நூலில் பல கருத்துக்களும் சற்று விரிவாகவும் விரிவான மேற் கோள்களாகக் கம்பனுடைய பாடல்கள் பலவும் எடுத்துக் கூறப் பட்டுள்ளன. இராமாயணம் என்றாலே அது பெரிய இராமாயணம் தான். அது நமது நாட்டின் பெரிய இதிகாசமாயிற்றே! பெருங்காவிய மாயிற்றே! அது பெருங்கதையாயிற்றே! எனவே அதில் உள்ள எந்தக் கருத்தைத் தொட்டாலும் எந்தப் பகுதியைத் தொட்டாலும் சற்று விரிவாகவும் விளக்கமாகவும் போய் விடுகிறது.