பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் == காதலும் பெருங்காதலும் xxxiv பேசுகிறார்கள். இராமன் அனுமனைச் சொல்லின் செல்வன் என்று பாராட்டுகிறான். வாலி, இராமனிடம் அனுமன் உனது தனுவுக்கு இணையானவன் என்ற கூறுகிறான். எனவே அனுமனைப் பாராட்டும் பல பாடல்களையும் குறிப்பிட வேண்டியதாயிற்று. பல நிகழ்ச்சிகளையும் மாறி மாறிக் குறிப்பிட வேண்டியதிருப்பதால் அப்போது இடைப்படும் சில கவிதைகளைத் திரும்பவும் சில இடங்களில் எடுத்துக் கூற வேண்டியதிருக்கிறது. அவ்வாறு மீண்டும் மீண்டும் சில சிறப்பான பாடல்களை எடுத்துக் காட்ட வேண்டிய தேற்பட்டிருக்கிறது. எனவே அப்பாடல்களைச் சற்றும் அலுப்புத் தட்டாமல் படிக்க வேண்டும். அத்துடன் அப்பாடல்கள் மிகவும் சிறப்பானவை. அவை சிறந்த கருத்துக் களும் சிறந்த தமிழ்ச் சொற்களும் நிறைந்தவை. அவைகளைத் திரும்பத் திரும்ப எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம். மேலும் கம்பனுடைய பல பாடல்களையும் சிறப்பு மிக்க பல கவிதைகளையும் நமது இளைஞர்கள் நமது உயர் நிலை மேல் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள், கவிஞர்கள் இலக்கியவாதிகள் ஏன் அனைத்து மக்களும் படிக்க வேண்டும். பாடம் பண்ண வேண்டும். அப்பாடல்களும் கவிதைகளும் அவைகளின் தமிழ்ச் சுவையும் கருத்துக்களும் மக்களிடம் பரவ வேண்டும். கம்பராமாயணம் ஒரு மகத்தான தமிழ் நூல். தமிழின் பேரிலக்கியம். இது தமிழால் பெருமைப்பட்டிருக்றிது. தமிழ் மொழி கம்ப ராமாயணத்தால் பெருமைப்பட்டிருக்கிறது. எனவே கம்பராமாயணம் மீண்டும் மீண்டும் மக்களால் படிக்கப்பட வேண்டும். கம்பனைப் பற்றியும் அவருடைய பெருங்காவியத்தைப் பற்றியும் பல வேறு கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு பல நூல்கள் வர வேண்டும். அவைகள் மக்களிடம் செல்ல வேண்டும். இந்த நூலை எழுதுவதற்கும் படி எடுப்பதற்கும் பிரதிகள் எடுப்பதற்கும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்திற்கு சிறந்த நூலுக்கு உதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பத்தைச் சேர்ப்பதற்கும் மற்றும் நான் எழுதும் நூல்களை அச்சடிக்கவும் நூல்களை விற்பனை செய்யவும் எனக்குத் துணையாக இருந்து ஊக்கமூட்டி வருவதில் என்னுடைய துணைவியார் திருமதி நாகலட்சுமியின் பங்கு முதன்மையானது.