பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் XXXIV இந்நூலின் கையெழுத்துப் பிரதியைப் படித்து அதில் ஏற்பட்டிருந்த எழுத்துப் பிழைகள் ஒத்துப்பிழைகள் சில கருத்துப் பிழைகள் முதலியவற்றை ஒரு முறைக்கு இரு முறை படித்தும், திருத்தியும் சரிபார்த்துள்ள எனது மகள் திருமதி எஸ். பகீரதி எம்.ஏ (தமிழ்) ஆசிரியை செய்துள்ள உதவி எப்போதும் நினைவு கூறத்தக்கது. இருவருக்கும் எனது அன்பான நன்றியைப் பதிவு செய்து கொள்கிறேன். இந்நூலைப் படிக்கும் அன்பர்கள் நன்கு பயன்பெருக. கம்பனைப் போற்றுக. கம்பனைப் பரப்புக, இந்நூலைப் பற்றிய கருத்துக்களை அனுப்புக. கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க, அ.சீனிவாசன் நூலாசிரியர்