பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 1. தோற்றுவாய் கம்பநாடரின் மகாகாவியமான இராமாவதாரப் பெருங்கதையில் பல பெண்பாத்திரங்கள் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. தெய்வீகப் பத்திரங்களாகவும் மானிடப் பாத்திரங்களாகவும், அசுரப் பத்திரங்களாகவும் அவர்கள் கதையில் முக்கிய இடம் பெற்று | மாடுகிறார்கள். கம்பனுடைய சில முக்கிய பெண் பாத்திரங்களின் செயல்பாடுகள் கதையில் முக்கிய திருப்பங்களை விளைவிக்கின்றன. தசரதச் சக்கரவர்த்தியின் மூன்று மனைவியரில் கைகேயி கதையில் முக்கிய இடம் பெற்றுள்ளார். கதையின் மிக முக்கியமான திருப்பத்திற்குக் காரணமாகிறாள். சுத்த வீரனான இராமபிரான் தனது கன்னிப்போரில் தாடகை என்னும் பெண் எனத்திரியும் பெற்றியாளைச் சந்திக்கிறான். சூர்ப்பனகை இலங்கையின் அழிவிற்கு வித்திடுகிறாள். சபரி இராம இலக்குவர்களுக்கு வழிகாட்டியாகப் பயன்படுகிறாள். தாரை கிட் கிந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறாள். இராவணனுடைய மனைவியரில் இந்திரசித்தனின் தாயான மண்டோதரி இலங்கையின் அரச மாளிகையில் ஒரு அடக்கமாக ஆனால் கம்பீரமாக இடம் பெற்று, போர்க்களத்தில் கொல்லப்பட்ட தனது கணவனுடைய உடல் மீது விழுந்து தானும் உயிர் துறந்து தனது கற்பு |ைெலயை வெளிப்படுத்தி சிறப்புப் பெறுகிறாள். திரிசடை என்னும் நல்லாள் அசோக வனத்தில் சிறைப்பட்டிருந்த சீதைக்குக் காவலாகவும், துணையாகவும் இருக்கிறாள். சீதையின் மிக உயர்ந்த தெய்வீகக் கற்பு நிலையும் சிறைவாசமும் அவளுடைய அடக்கமும் பொறுமையும் அவளுடைய தெய்வீகத் தன் மையைத் தெளிவுப்படுத்துகிறது.