பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 2 இராமாயண இதிகாசத்தில் வரும் பெண்பாத்திரங்களின் தனித் தன்மைகளும் தனிச்சிறப்புகளும் ஒரு புறம் இருக்க தசரதன் கைகேயி பால் வைத்த நேயமும் இராமபிரான் சீதாபிராட்டியின் பால் வைத்திருந்த பேரன்பும் கிட்கிந்தையில் வாலி மனை மாட்சியை அழித்ததும், இலங்கை வேந்தனின் பெருங்காதலும் காம வெறியும் கதையில் முக்கிய திருப்பங்களை உண்டாக்கி அவை மிகவும் கடினமான கதை நிகழ்ச்சிகளாகவும் அமைந்துள்ளன. பெண்கள் பால்வைத்த நேயம் மற்றும் பெருங்காதல் பற்றிக் கம்பநாடர் மிகச் சிறப்பான பல சமுதாயக் கருத்துக்களைத் தனது மகாகாவியத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் சமூக நெறிமுறைக் கருத்துக்களும் ஒழுக்க நெறிமுறைக் கருத்துக்களும் பொதுவான அறநெறிக் கருத்துக்களும் வெளிப்படுகின்றன. சூர்ப்பனகை இராமன்பால் வலியுறுத்திய மோகம் ஒருதலைக் காமமாகும். அதேபோல இராவணன் சீதைபால் வைத்த மோகமும் ஒருதலையானது. ஆதிக்கத்தன்மையும் வன்முறைத்தன்மையும் கொண்டது. காதல் என்பதும் கற்பு என்பதும் ஆண் பெண் பாலுறவு என்பதும் இருபாற்பட்டது என்னும் நெறி முறை மிகவும் வலுவாக முந்திய இந்திய சாத்திரங்களில் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. மிகையான பெண்ணாடலும் பெண்ணாட்டமும் பொதுவாக பல ஆண்களிடம் ஏற்படுவதாகும். அவை பல சமயங்களிலும் தவறான பாதகமான, எதிர்மறையான விரும்பத் தகாத விளைவுகளை உண்டாக்குகின்றன. அதிலும் குறிப்பாக அரசப் பொருப்பில் தலைமைப் பொருப்பில் அதிகாரப் பொருப்புகளில் உள்ளவர்களிடம் அக் குணங்களும் செயல்களும் இருக்குமானால், அதனால் ஏற்படும் விளைவுகளும் கடுமையாக இருக்கின்றன என்பதையும் இராமாயணக் காவியத்தில் கம்பன் மிகவும் சிறப்பாகவும் நுட்பமாகவும் சமுதாய நோக்கில் எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். பெண்மைக்கு நமது சாத்திரங்கள் முதலிடமும் முக்கிய இடமும் கொடுத்துள்ளன. நமது நாட்டைத் தாய் நாடு என்றும் பாரதத்தை பாரத தேவி என்றும் குறிப்பிடுகிறோம். கல்விக்குக் கலைமகள் செல்வத்திற்குத் திருமகள், வீரத்திற்கு மலைமகள் என்றும் நமது தெய்வங்களைப் போற்றுகிறோம். நமது தெய்வங்களில் மும் மூர்த்திகள் பிரபலம் அவை படைத்தல், காத்தல், நீக்கல் என்னும் முத்தொழில்களை