பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கம்பநாடன் காவியத்தில் 4 -X== காதலும் பெருங்காதலும் அறிந்துள்ள அறிவின் மூலம் பாகுபடுத்திப் பரிசீலனை செய்து ஒரு நிலைக்குவருவது ஆறாவது அறிவு. அது மனிதனுக்கே உரியது. ஒரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் உள்ளன. இவைகளின் புல்பூண்டு, செடி, கொடி, மரம் முதலிய பலவகை தாவர இனங்களும் புழு, பூச்சி, வண்டு முதலிய உயிரினங்களும் நீரில் வாழும் உயிரினங்களும் பறவைகளும் விலங்குகள் முதலிய எண்ணற்ற ஜீவராசிகள் அடங்கும். இவைகளைப் பற்றியெல்லாம் நமது சாத்திரங்கள் ஆய்வு செய்து விவரங்கள் வெளியிட்டுள்ளன. இவைகளிலிருந் தெல்லாம் உயர்ந்து மனிதன் ஆறறிவு பெற்றுள்ளான். அது பகுத்தறிவு என்று அழைக்கப்படுகிறது. 'சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்றைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு’ என்று வள்ளுவனார் குறிப்பிடுகிறார். “சுவைத்தல், பார்த்தல், உணர்தல், கேட்டல், முகர்தல் என்னும் ஐந்து குணங்களின் பகுதிகளை ஆராய்ந்தவனின் அறிவிற்குள் அடங்கும் உலகம்' என்ற அக்குறளுக்கு அறிஞர்கள் பொருள் கூறியுள்ளனர். ஆறறிவில் முதிர்ச்சி பெறாத பல மனிதர்களும் உண்டு. ஆயினும், கல்விப்பயிற்சியால், வினைப் (செயல் - தொழில்) பயிற்சியால், அனுபவ அறிவின் வளர்ச்சியால் மனிதன் தனது ஆறாவது அறிவில் மேலும் மேலும் அதிகமாக முதிர்ச்சி பெறலாம். முதல் ஐந்து அறிவுகளுக்கு ஒருவரம்பு உண்டு, ஆனால் ஆறாவது அறிவுக்கு அதன் வளர்ச்சிக்கு வரம்பேயில்லை. அதற்கு எல்லையே இல்லை. நிர்ணயிப்பதற்கு முயற்சி செய்வர். அம்முயற்சி சில பேரிடம் சில நேரம் சில நாட்கள் வெற்றியும் கூட பெறக்கூடும். ஆனால் அம்முயற்சிகள் எல்லோரிடமும் செல்லாது. பொதுவாக அம்முயற்சிகளின் பலன் தாற்காலிகமானதேயாகும். உதாரணமாக நமது நாட்டில் அன்னியர் ஆட்சியும் அன்னியர்களின் ஆதிக்கமும், நமது நாட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், அரசியல் பொருளாதார அனுபவ வளர்ச்சிக்கும் தடையாக இடையூறாக இருந்தன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அத்தடைகள் இடையூறுகள் நீங்கியுள்ளன. நாட்டின் பொது அறிவு வளர்ச்சிக்கும் இப்போது புதிய வாய்ப்புகள் எற்பட்டுள்ளன. மற்றொரு உதாரணம், மனித உலகில் பலவகைக் குறுகிய சண்டைகள் ஏற்படுகின்றன, நிகழ்கின்றன. தனி நபர் சண்டைகள் போட்டி பொறாமைகளால் பெண்பாலுறவுகள் முதலியவைகளால்