பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 5 சண்டைகளும் வெட்டு குத்துகளும் வழக்குகளும் ஏற்பட்டு அதனால் நேரம் கால விரயங்கள் ஏற்படுகின்றன. பலவகையான சாதிச் சண்டைகள், மொழிச் சண்டைகள், மதச் சண்டைகள், தெருச் சண்டைகள் நாடுகளுக் கிடையில் சண்டைகள், உலகப் போர்கள் ஆகியவை ஏற்பட்டும் பெரும் அளவில் ஆள் சேதம் பொருட்சேதம் ஏற்பட்டிருக்கின்றன. இவைகளுக்கு கெல்லாம் மனிதனுடைய மனித சமுதாயத்தினுடைய ஆறாவது அறிவு போதுமான அளவில் வளர்ச்சியடையாமல் இருந்ததே காரணமாகும். அளவுக்கு மீறிய சுய நலமும் பேராசைகளும் இவைகளில் அமையும். ஆயினும் சில தனிநபர்களுக்கு இடையிலும் கூட்டங்களுக்கும் நாடுகளுக்கும் இடையிலும், சாதி, மதம், இனம், மொழி, நாடுகளின் பேரால் சண்டைகளைத் துண்டும் நபர்களுக்கும் கூட்டத்திற்கும் புத்தி புகட்ட சில நேரங்களில் நியாயமான சண்டைகளும் ஏற்படலாம். அத்தகைய சண்டைகளைத் தர்மயுத்தம் எனக் கூறலாம். நிற்க. ஐம்பொறிகள் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்துமாகும். இவைகளை ஐம்புலன்கள் என்று கூறுகிறோம். இவைகள் மூலம் புலனறிதல் நிகழ்கின்றன. ஐம்புலனறிவு என்பது சுவை, ஒளி, ஊறு, ஒசை, மனம் ஆகியவைகள் மூலம் அறியப்படும் அறிவாகும். அதாவது தொட்டுணர்தல், ருசித்தல், காணல், நுகர்தல், கேட்டல் ஆகியவைகள். ஐம்புலனறிவுகளைப் பல வாறாக இணைத்துப் பார்த்து ஒரு பொருளைப் பற்றி முழுமையாக அறிதல் ஒரு உயர்ந்த மட்டத்திலான அறிவாகிறது. பஞ்ச பூதங்களின் பல்வேறு வகையான சேர்மானங்களால் இந்த உலகில் உள்ள சகலவிதமான பொருள்களும் ஆக்கப்பட்டிருக் கின்றன. அப்பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளைச் செய்வது கண்ணனே என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகிறார்கள். கோசல நாட்டில் தசரத மன்னனின் ஆட்சியில் மக்களுடைய ஐம்புலன்களும் நெறி தவறாமல் அதனதன் பணிகளை ஆற்றி வந்தன என்று கம்பர் கூறுகிறார். மனிதனை அவனுடைய ஐம்புலன்கள் பலவேறு கொடுமைகளுக்குள்ளாக்குகின்றன என்றும் பல வேறு கொடுமைகளைச் செய்யத் துண்டுகின்றன என்றும் நமது தத்துவ ஞான சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அளவுக்கு மீறிய ஆசைகளை செயல் வேகங்களை ஐம்புலன்கள் உண்டாக்கிவிடுகின்றன. அவை களை அடக்கி ஒருமுகப்படுத்த வேண்டும் என்று நமது சாத்திரங்கள் குறிப்படுகின்றன. அதைப் புலனடக்கம் என்று கூறுகிறோம்.