பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 6 ஐம்புலன்கள் கூர்மையான ஆயுதங்களைப் போன்றவை என்றும் கம்பன் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். அவ்வாயுதங்களை சீரான முறையில் செலுத்தாவிட்டால் அவை பல அபாயகரமான விளைவு களை உண்டாக்கிவிடும். அது போல பொன்மணி மாலைகள் கிடந்து அசைகின்ற அழகிய உருண்ட தனங்களைக் கொண்ட பெண்களின் கண்களும் அவைகளின் பார்வையும் கூறிய அம்புகளைப் போன்றவை என்று கம்ப நாடர் குறிப்பிடுகிறார். பெண்களின் கண்களைக் கூர்மை யான அம்புகளுக்கு ஒப்பிடுவது நமது கவிஞர்களினி மரபாகும். இளமையான பெண்களின் கூர்மையான கண்பார்வையில் கலங்காத ஆண்களில்லை. ஆனால் கோசல நாட்டின் பெண்களின் கண்களின் பார்வை, தசரதன் ஆட்சியில் நெறிமுறை தவறாமல் நேர்மையாகவே சென்றன என்பது கம்பருடைய வாக்காகும். ஒழுக்க முறை பற்றிய கம்பருடைய இக்கருத்து மிகச்சிறப்பானதாகும். இக்கருத்து கம்பருடைய காவியத்தின் அடுத்த நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது. கம்பர் தனது மகா காவியத்தில் இத்தகைய நெறிகளைப் பற்றிப் பல இடங்களிலும் குறிப்பிடுகிறார். கம்பன் தனது இராமாயணத்தின் பாலகாண்டத்தில் ஆற்றுப் படலத்தில் கோசல நாட்டின் ஆற்றின் சிறப்புகளைக் குறிப்பிடுகிறார். 'ஆசு அலம் புரி ஐம் பொழி வாளியும் காசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக் கோசலம் புனை ஆற்றணி கூறுவாம்' என்பது கம்பன் கவிதையாகும். மிக்க துன்பங்களைக் கொடுத்துவரும் ஐம்புலன்கள் என்னும் கூர்மையான ஆயுதங்களும் பொன்மணி மாலைகளும் ஆபரணங்களும் அசைந்தாடும் திரண்ட தனங்களைக் கொண்ட அழகிய பெண்களின் பூசல் நிறைந்த கண்களின் தாக்குதல் தன்மை கொண்ட அம்பு போன்ற கூர்மையான பார்வைகளும் கூட நெறியிலிருந்து புறம் போகாதக் கோசல நாடு என்று சிறப்பாகக் கம்பன் குறிப்பிடுகிறார். இங்கு தசரதன் ஆட்சியில் நெறி தவறாதுச் செல்கின்ற மூன்று ஒட்டங்கள் ஐம்புலன்களின் செயலோட்டங்கள் பெண்களின் கூரிய கண்களின் கணையோட்டங்கள் கோசல நாட்டின் ஆற்றின் நீரோட்டங்கள் ஒப்பிடப்படுகின்றன. புலனடக்கம் பற்றி நமது சாத்திரங்கள் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இராமாயணப் பெரும் காவியத்தில் இராமன் பரதன், இலக்குவன், அனுமன், வீடணன் ஆகியோரின்