பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் முன்னுரை கவிச் சக்கரவர்த்தி கம்பர் எழுதிய இராமாவதாரம் என்னும் பெருங்காவியம் கம்பராமாயணம் என்று பெயர் பெற்று, புகழ் பெற்று விளங்குகிறது. கிரேக்க இதிகாசங்கள் மேலை நாடுகளில் புகழ் பெற்றுப் பரவியுள்ளதைப் போல இந்திய இதிகாசங்களான இராமாயணமும், மகா பாரதமும் கிழக்கு நாடுகளில் புகழ் பெற்றுப் பரவியுள்ளது. இங்குள்ள மக்களின் இலக்கிய வாழ்வில் இணைந்து பொதுக் காலச்சாரத்தின் பகுதியாக வேர்விட்டுள்ளது. இன்றைய உலகில் இவ்விந்திய இதிகாசங்கள் பல நாடுகளிலும், பல மொழிகளிலும் பரவியுள்ளன. மக்களிடம் விரிவாகப் பரவியுள்ளது. உறுதியாக நிலை பெற்றுள்ளது. அது போலவே கம்பராமாயணம் தமிழில் புகழ்பெற்று நிலை பெற்றுப் பரவியுள்ளது. உலகப் பேரிலக்கியத்தின் தரத்திற்கு உயர்ந்துள்ளது. வால்மீகி ராமாயணம் எழுதப்படுவதற்கு முன்பே, இராம காதை இந்திய மக்களிடம் வாய் வழியாகவும், கர்ண பரம்பரைக் கதையாகவும் பழக்கத்தில் இருந்து வந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். திருமாலுடைய அவதாரப் பெருமைகளைப் பற்றியெல்லாம், நாரதர், வால்மீகி முனிவருக்குக் கூற, அதைக் கேட்டு வால்மீகி தனது இராமாயணக் காவியத்தைப் பாடியதாகச் செய்தி உண்டு.