பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 9 அறங்கள் நின்றன. அவர்களின் கற்பின் சிறப்பு காரணமாக பருவ மழை பொய்க்காமல் தவறாமல் பெய்து கொண்டிருந்தது என்று கம்பர் கூறுகிறார். இங்கு நல்ல பல பண்புகள், அவையாவன, பொய்யிலாமை, நீதி, அன்பு, அறம், கற்பு ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. மாதர்களின் அன்பு, அறம் கற்பு ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றன. பாரத நாட்டு மாதர்களின் அன்பும், அறமும் கற்பும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், புகழ் மிக்கதும் பாரதப் பண்பாட்டை நிலை நிறுத்து வனவுமாகும். எனவே கம்ப நாடர் பொற்பின் நின்றன. பொலிவு; பொய் இலா நிற்பின் நின்றன நீதி; மாதரார் அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர் கற்பின் நின்றன கால மாரியே.” என்று கூறுகிறார். இங்கு இந்திய மாதர்களின் கற்பும் அன்பும், அறம் நிறைந்தன என்பதும் கூறுப்படுவது கவனிக்கத்தக்கதாகும். பொன் விலைப் பாவையர் விலை மாதர்களைப் பற்றியும் கம்பர் ஆங்காங்கு உதாரணத்திற்காகத் தனது காவியத்தில் குறிப்பிடுகிறார். அயோத்தி மாநகரில் உள்ள கோட்டைச் சுவரைச் சுற்றியுள்ள ஆழமான அகழியைப் பற்றிக் குறிப்பிடும் போது 'பொன்விலை மகளிர் மனம் எனக்கீழ் போய்’ என்று குறிப்பிடுகிறார். கம்பர் அயோத்தி நகரின் கோட்டைச் சுவரின் உயரத்தையும் அதைச் சுற்றியுள்ள அகழியின் ஆழத்தையும் சிறந்த உவமைகள் கூறி ஒப்பிட்டுச் சிறப்பித்துக் கூறுகிறார். மேன்மையான அறிவிற்கும் முடிவு இல்லை. எல்லை இல்லை. எல்லையில்லாத முடிவில்லாத அறிவு நிறைந்தது வேதம். அம்முடிவில்லாத வேதத்தை ஒக்கும் கோட்டை மதிலின் உயர்வு, வானளாவி உயர்ந்து விண் புகுதலால் அது தேவலோகத்தை ஒக்கும் முனிவர்கள் தங்களின் தவத்தின் மூலம் ஐம்பொறிகளை அடக்குவர். அல்லது தங்களுடைய ஐம்பொறிகளையும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) அடக்கித் தவம் செய்வர். அத்தவத்தின் உயர்வைப் போல் அம்மதில் சுவர் உயர்ந்திருந்தது. காவலில் சிறப்பானவள், உயர்ந்தவள் துர்க்காதேவி, சூலத்தால் பலம் பெற்ற உயர்ந்து விளங்குபவள் காளி. ாசன் மிகவும் உயர்ந்தவன். அவனை அடைவது அரிது. எனவே அயோத்தியின் கோட்டை மதில் ஈசனை ஒக்கும்.