பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 11 வானில் செல்லும் பகலவன் கோடைப் பருவத்தில் தனது கடும் வெப்பத்தின் மூலம் நிலத்திலுள்ள ஈரப் பசையை எடுத்து விடுகிறான். பருதி வானவன் நிலம் பசையறப்பருகுவான்’ என்று கம்பன் குறிப்பிடுகிறார். நிலம் பசையற்றுப் போனால் அது பாலைவனமாகி விடும். இவ்வாறு பசையற்றுப் போன நிலத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது 'பொன் விலைப்பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே’’ என்று கம்பர் குறிப்பிடுகிறார். இன்பதுன்பங்கள் குதித்தோடி வருவதற்குக் காரணமான நல்வினை தீவினை என்னும் இரு வினைகளையும் துறந்து, நீக்குவதற்குக் கடினமான காமம் வெகுளி (கடுங் கோபம்) மயக்கம் ஆகிய மூவகைப் பகை அரண்களையும் கடந்து முக்தி நெறியில் செல்பவர்களின் மனம் எந்த விதமான ஆசா பாசங்களுக்கும் இடமில்லாமல் பசையற்று இருக்கும் என்றும் பொன்விளைப் பாவையர் மனமும் எவ்வித அன்பும் உணர்வும் இன்றிப் பசையற்றிருக்கும் என்றும் கம்பன் குறிப்பிடுகிறார். வாழ்க்கையை முற்றிலும் துறந்தோர் உள்ளம், பொன்விலைப் பாவையர் மனம் ஆகிய இரண்டையும் பாலைநிலத்தில் உள்ள பசையற்றுப் போன மண்ணுக்குக் கம்பன் உவமையாகக் கூறுகிறார். வாழ்க்கை சிறந்த முறையில் செயல்படுவதையும் வாழ்க்கையை முற்றிலுமாகச் சிறந்த முறையில் அனுபவிப்பதையும் கம்பர் விரும்புகிறார். அதை வெறுத்துப் பசையற்றுப் போவதை அவர் விரும்பவில்லை என்பதை நாம் அறிய முடிகிறது. பசையற்ற பாலைவனமும் பயன்படாது. அது போல் பசையற்ற வாழ்க்கையும் பயன்படாது என்பது கம்பன் கொள்கையாகும். 4_ _ _ *** *్మ* ***