பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 12 >}=== காதலும் பெருங்காதலும் 2. பெண் உருக்கொண்டெனத் திரியும் பெற்றியாள் பாலை நிலத்தின் இயல்பை, அதன் பசையற்றுக் கிடக்கும் மண்ணின் இயல்பைக் கம்பன் கூறுவது, அதன் பின்னர் தாடகை வாழும் கானகத்தின் கொடுமையைப் பற்றிக் கூறுவதற்கான முன்னோசையாக வருகிறது. தாடகையின் வரலாற்றையும் அவளுடைய அரக்க வாழ்க்கையையும் பற்றி விசுவாமித்திர மாமுனிவர் இராமபிரானுக்கு விவரித்துக் கூறுகிறார். தாடகையின் கணவன் சுந்தன். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள், குமாரர்கள். அவர்கள் மாரீசன், கவாகு ஆகியோர். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியில் சுந்தன், அகத்தியர் தவம் செய்து கொண்டிருந்த வனத்திற்கு வந்து அங்கு அட்டகாசம் செய்தான். அகத்தியர் கோபமடைந்து சுந்தனைச் சுட்டெரித்தார். சுந்தன் சாம்பலானான். இச்செய்தியைக் கேட்டுத் தாடகையும் அவளுடைய மைந்தர்களும் அகத்தியரை நோக்கி, அவரைத் தாக்குவதற்கு ஓடிவந்தார்கள். அவர்கள் மூவரையும் அரக்கர்களாகும் படி அகத்தியர் சாபமிட்டார். அதைக் கம்பன் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். "தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்” என்று அகத்தியரைப் பற்றிக் கம்பர் கூறுகிறார். தமிழை அகலமும் ஆழமும் நிறைந்த மிகுந்த மகாசமுத்திரத்திற்கு ஒப்பிட்டு அத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவன் அகத்தியன் என்பது இங்கு கம்பருடைய வாக்காகும். "தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன், உமிழ்கனல் விழிவழி ஒழுக, உங்கரித்து அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே இழிகென உரைத்தனன் அசனி எஞ்சவே' தாடகை அரக்கியானாள் கடுங்கோபம் கொண்டு அந்தப் பகுதியில் படு அட்டகாசம் செய்தாள். அவளைப் பற்றி விவரித்துக் கம்பன், பாவம் அனைத்தும் ஒன்று திரண்டு பெண் உருக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். எதற்கும் அஞ்சமாட்டாள், எதையும் செய்வாள். பூமி அதிர்ச்சி ஏற்பட்டு உருக்கினாலும் கடல் அலைகள் பொங்கி எழுந்தாலும் மிகுந்த சினத்துடன் வானம் இடித்தாலும், அவற்றை