பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 13 யெல்லாம் பொருட்படுத்தாமல் தான் நினைத்ததை மனம் போன போக்கில் எதையும் செய்வாள் என்று கம்பன் கூறுகிறார். அத்தகைய தாடகை அளவும் உருவும் அறிய முடியாத அளவில் அனைத்து பாவங்களும் ஒன்று திரண்டு பெண் உருக்கொண்டு திரியும் தன்மையுள்ளவள் என்று கம்பர் குறிப்பிடுகிறார். தாடகையின் கொடுமை நிறைந்த வடிவமும், தமிழின் ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த சொற்களும் கம்பன் பாடலில் புலப்படுகின்றன. “மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும், விண் உருத்து இடிப்பினும், வேண்டின் செய்கிற்பாள்; எண் உருத் தெரிவரும் பாவம் ஈண்டி ஒர் பெண் உருக்கொண்டெனத் திரியும் பெற்றியாள்' என்று கம்பர் குறிப்பிடுகிறார். இன்னும் தாடகையைப் பற்றிக் கம்பர் கவிவாக்கிலும் விஸ்வாமித்திரர் வாக்கிலும் மிகவும் விரிவாகக் குறிப்பிடுகிறார்கள். தாடகை வதம் இராமாயணக் காவியத்தில் முக்கியமான நிகழ்வாகும். இராம, இலக்குவர்களை விசுவாமித்திரர் அழைத்துச் செல்வது ஒரு முக்கியமான திருப்பமாகும். விஸ்வாமித்திரர் இராம இலக்குவர்களை அழைத்துச் செல்வதும் அவர்களுக்கு சில ஆயுதப் பயிற்சிகளைக் கொடுப்பதும் சில முக்கியமான தெய்வீகப் படைக்கலன்களைக் கொடுப்பதும் மற்றும் தாடகை வதத்திற்குக் காரணமாக இருப்பது, அகலிகைக்கு சாப விமோசனம் கிடைப்பது, மிதிலை பயணம், வில்லைக் காண்பது, வளைப்பது, திருமணம் ஆகியவையெல்லாம் விசுவாமித்திரர் உடனிருந்து நிகழும் நிகழ்ச்சிகளாகும். தாடகையைப் பற்றி நச்சுப் பாம்பு சுழலும் சூலக்கையினள், காட்டிலேயே வாழ்க்கை நடத்துபவள் சழக்கி (குற்றமே உருவானவள்) என்றும் நல்ல நிறைந்த குணங்களை உலோபத்தன்மை அழித்து விடுவதைப் போல கொடுமை நிறைந்த இந்த அரக்கி செழிப்புமிக்க மருத நிலத்தைப் பாலை நிலமாக்கியவள் என்றும் கம்பர் குறிப்பிடுகிறார். இன்னும் இவள் மலை போன்ற வலிமை கொண்டு எனது வேள்விகளை அழிக்கிறாள். இந்த அங்க நிலம் முழுவதிலும் உள்ள மக்களைக் குலம் குலமாகக் கொன்று திரிகிறாள். உலகில் உள்ள உயிர்களையெல்லாம் தனது உணவாகக் கருதுகிறாள் என்றும்