பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|-- கம்பநாடன் காவியத்தில் 14 <{=خك< காதலும் பெருங்காதலும் இன்னும் சிறிது நாட்களில் மன்னுயிர் அனைத்தையும் தன் வயிற்றில் இட்டுக் கொள்வாள் என்றெல்லாம் அவளுடைய கொடிய வடிவத்தையும் கொடுமை மிக்க செயல்களையும் காவியம் , விவரித்துக் கூறுகிறது. பெண் என மனத்திடை பெருந்தகை நினைத்தான் இத்தகைய கொடுங் குணங்கள் நிறைந்தவளான தாடகையைக் கொல்லுமாறு முனிவன் கூறிய போது அவள் ஒரு பெண்ணாயிற்றே என்று இரக்கம் கொண்டு இராமபிரான் மனதில் நினைத்தான். அதைக் கம்பன், 'அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், ஆவி உண் என வடிக்கனை தொடுக்கிலன் உயிர்கே துண் எனும் வினைத் தொழில் தொடங்கியுளள் எனும் பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான்' “அந்தக் கொடியாளைக் கொல்ல வேண்டும் என்பது கோசிகன் கருத்தென்றாலும் அத்தாடகை ஒரு பெண் என்பது பெருந்தகை யாளனான இராமபிரான் தனது மனத்திடை நினைத்தான்’ என்று கம்பர் குறிப்பிடுகிறார். மாதென்று எண்ணுதியோ? இராமனுடைய எண்ணத்தையும் தயக்கத்தையும் உணர்ந்த விசுவாமித்திர முனிவர் கூறுகிறார். "தீதென்று உள்ளவை யாவையும் செய்து, எமைக் கோதென்று உண்டிலள்; இத்தனையே குறை யாதென்று எண்ணுவது இக்கொடியாளையும் மாதென்று எண்ணுதியோ மணிப்பூணினாய்’’ தீயவை என்று எவையெல்லாம் உள்ளனவோ அவைகளை யெல்லாம் செய்து கொண்டிருப்பவள், என்னைப் போன்றவர்கள் தவம் செய்து எங்களுடைய உடம்பு எந்த விதமான சதைப் பற்றும் இல்லாமல் வெறும் எலும்பும் சக்கையுமாக இருப்பதால் அவள் எங்களைக் கொன்று தின்னாமல் விட்டு விட்டாள். எனவே இக் கொடியவளை யாதென்று எண்ணுவது இவளை வெறும் மாது என்று எண்ணுகிறாயா' என்று முனிவன் கேட்கிறார். இன்னும்,