பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 20 تحجّاۓ تو காதலும் பெருங்காதலும் “இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி இந்த உலகுக்கெல்லாம், உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ! மைவண்ணத்து அரக்கிபோரில் மழை வண்ணத்து அண்ணலே உன், கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்’ என்று விசுவாமித்திர மாமுனிவர் இராமபிரானைப் போற்றுகிறார். 4. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? விசுவாமித்திர மாமுனிவரும் இராம இலக்குவர்களும் மிதிலை நகரை அடைகிறார்கள். நகரின் இராஜ வீதி வழியாக நடந்து செல்கிறார்கள். சீதை அரண்மனையின் மேல் மாடத்திலிருந்து இராமனைக் காண்கிறாள். இராமனும் அவளைக் காண்கிறான். இந்த அற்புதமான காட்சியைக் கம்பன் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். சீதை தோன்றிய அழகை "இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே, மழை பொரு கண் இணை மடந்தை மாரொடும் பழகியது எனினும் இப்பாவை தோன்றலால் அழகெனும் அழகும் ஒர் அழகு பெற்றதே' என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு சீதை தோன்றியதை இராமன் கண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இந்தக் காட்சியைக் கம்பர் மிகவும் அற்புதமாகக் கூறுகிறார். இதைப் புகழ்ந்து கூறாதப் புலவர்களில்லை. 'எண் அரு நலத்தினாள் இனையள் நின்றுழி கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்' இருவரும் ஒருவரையொருவர் நோக்கினர் என்றும் அந்நோக்கில் சீதையின் நோக்கு இராமனின் தோள்களில் தைத்தன வென்றும் இராமனுடைய நோக்கு சீதையின் தனங்களில் தைத்தது என்றும்