பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 21 பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ஒருவரை யொருவர் உள்ளம் ஈர்த்து இருவரும் மாறி மாறிப்புக்கு இதயம் எய்தினர் என்றும் கம்பன் குறிப்பிடுகிறார். 'நோக்கிய நோக்கெனும் நுதிகொள்வேல் இணை, ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன; விக்கிய கனைகழல் வீரன் செங்கணும், தாக்கணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே' என்பதும், “பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து, ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும், வாள் கண் நங்கையும் இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ என்பதும் கம்பநாடரின் பாடல்களாகும் இராமனும் சீதையும் ஒருவரையொருவர் தொலைவிலிருந்து நோக்கி இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் புகுந்து ஈருடலும் ஒருயிரும் ஆயினர். 'மருங்கிலா நங்கையும், வசை இல் ஐயனும் ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்; கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? என்று கம்ப நாடர் அற்புதமாக இராமன் சீதை தெய்வீகக் காதலைக் குறிப்பிடுகிறார். திருமாலும் இலக்குமி பிராட்டியும் பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தனர். அங்கிருந்து நீங்கி பூமியில் அவதாரமெடுத் துள்ளனர். இங்கு இருவரும் சந்தித்தனர். அது பாற் கடலிலிருந்து பிரிந்த பின்னர் முதல் சந்திப்பு. அந்தக் காட்சியைக் கம்பநாடர் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? என்னும் அற்புதமான சொற்களில் மிக நுட்பமான கருத்துடன் குறிப்பிடுகிறார் மகா கவியினுடைய இந்தப் பாடல்களையும் அதில் வரும் அற்புதமான இன் தமிழ்ச் சொற்களையும் புகழாத, பாடாத புலவரில்லை. விஸ்வாமித்திர முனிவருடன் இராமன் மிதிலைக்குச் செல்லுதல், இராஜவிதி வழியாக நடந்து செல்லுதல், தொலைவிலிருந்து இராமனும் சீதையும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்ளுதல் இருவர் உள்ளங்களிலும் காதல் மலர்ச்சி கொள்ளுதல், இருவரின் மன நிலை,