பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 22 >=}=ट्टे-- காதலும் பெருங்காதலும் இராமன் வில்லை வளைத்தல் மற்றும் திருமணம் வரை, கம்பர் தரும் காட்சி ஒரு அபூர்வமான தெய்வீகக் காதல் காட்சியாகும். கம்பர் இதை மிகவும் அற்புதமாகத் தனது காவியத்தில் எடுத்துக்காட்டுகிறார். பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும் இராமனைக் கண்டது முதல் சீதையும் காதல் வசப்பட்டு உடல் உருகினாள். காதல் நோய் பற்றி மிகவும் நுட்பமாக அழகியலுடன் கம்பநாடன் கவிதை குறிப்பிடுகிறது. 'நெருக்கி உள்புகுந்து அரு நிறையும் பெண்மையும் உருக்கி என் உயிரொடும் உண்டுபோனவன் பொருப்பு உறழ் தோள்புணர் புண்ணியத்தது கருப்பு வில் அன்று; அவன் காமன் அல்லனே' என்றும் 'பெண்வழி நலனொடும் பிறந்த நானொடும் எண் வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலென்; மண்வழி நடந்தடி வருந்தப் போனவன் கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொல்; ஆம்’ என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்த கள்வனால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சீதை தனது காதல் நோயைப் பற்றித் தனது தோழிமார்களிடம் குறிப்பிடுகிறாள். இராமனுடைய உருவம் நெருக்கி சீதையின் உள்ளத்தில் புகுந்து விட்டதால் அவளுடைய பெண்மையும், பொறையுடை நிறையும், பெண்களுக்கு இயல்பாக உள்ள நலனும், அழகும், நாணமும் உருகி அவளுடைய உள்ளம் கலக்கம் அடைகிறது என்று மென்மையான பெண்மையைப் பற்றிக் கம்பன் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். ஆசை நோய்க்கு வேறு மருந்தில்லை என்று கம்பன் குறிப்பிடுகிறார். இது உலக வழக்காகும். வீறுசேர் முலை மாதரை வெல்வரோ? ஆணும் பெண்ணும் இல்லாமல் உலகம் இல்லை. ஆண்மையும் பெண்மையும் இல்லாமல் உலக வாழ்க்கை இல்லை. நமது தர்ம சாத்திரங்கள் வாழ்க்கையைத் துறக்கச் சொல்லவில்லை. சில