பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் |- 23 கடமைகளை உறுதியாக நின்று வைராக்கியத்துடன் நிறை வேற்றுவதற்குச் சில கடினமான முயற்சிகளும் அர்ப்பணிப்பும் 町 == ஈடுபாடும் தவமும் தேவைப் படுகிறது. அதற்கு வாழக்கையி லிருந்து குறிப்பாக இல்வாழ்க்கை ஆயிலிருந்து விலகிச் செல்ல இ வேண்டும் என்பதில்லை. ஆண், பெண் காதலை மிகவும் மென்மையான அழகியலுடன் நமது நூல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. மன்மதன் ரதி என்னும் வடிவங்கள் நமது இலக்கியங்களில் மிகச் 少 சிறந்த பாத்திரங்களாகும் .காதல் தெய்வங்களாகும் يَقة தவையான காத ல் 3( ”ککیک کاجُ כאT உணர்வை ஊட்டக் கூடிய அற்புதமான தெய்வீகப் நீ பாத்திரங்களாகும். அவை ஆண் பெண் அழகு வ டி வ ங் க ள ா கு ம . எடுத்துக்காட்டான அற்புதமான அழகுக் கலையின் துடிப்பான வடிவங்களாகும். உள்ளத்தில் ஊக்கமுடைய, மிக்க தவமுயற்சியையுடைய முனிவர்களால் மன்மதனுடைய கணையிலிருந்து விலகிக் கொள்ள முடியும் என்பதெல்லாம் வெறும் வாய்ச் சொற்கள் மாத்திரமேயாகும். அதுவும் கூட பூக்கொய்யும் பெண்களின் கடைக் கண் நோக்கின் முன்பாக யாரும் நிற்க முடியாது, அதிலிருந்து எவராலும் தப்பிக்க முடியாது என்று கம்பன் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். 'ஊக்கம் உள்ளத்துடைய முனிவரால் காக்கல் ஆவது காமன் கைவில் எனும் வாக்கு மாத்திரம்; அல்லது, அல்லியின் பூக்கொய்வார் புருவக்கடை போதுமே” என்றும் இன்னும்,