பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 24 2)== காதலும் பெருங்காதலும் 'நாறு பூங்குழல் நன்னுதல், புன்னை மேல் ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள் ஊறில் ஞானத்து உயர்ந்தவர், ஆயினும் வீறுசேர் முலை மாதரை வெல்வரோ?” என்றும் கூறுகிறார். குற்றமற்ற மேலான ஞானத்தால் உயர்ந்தவர் என்றாலும் அழகு பொருந்திய மாதரை வெல்ல முடியாது என்பதாகும். ஆண் பெண் உறவு, நல்லுறவு பாலுறவு, காதல், அழகு, விளையாட்டு, குடும்பம் ஆகியவை பற்றியெல்லாம் மிகவும் நுட்பமாக, தயரதன் தன் படைகளுடன் மிதிலைக்குச் செல்லும் போது இடைப்பட்ட காட்சிகளில் கம்பநாடர் மிகவும் அற்புதமாக எடுத்துக் கூறுகிறார். கங்கைக் கரையிலே நிலவொளியில் மாதரும் மைந்தருமாக மகிழ்ச்சியாகக் கலந்து, மகிழ்ந்து விளையாடியதையும் அவர்கள் காதல் மிகுதியால் ஒருவரோடு ஒருவர் இணைந்து பொருந்தியிருந்தனர் என்று கம்பர் விவரிக்கிறார். “ஊறுபேர் அன்பினாள் ஒருத்தி, தன் உயிர் மாறு இலாக்காதலன் செயலை, மற்றொரு நாறு பூங்கோதை பால் நவில நானுவாள் வேறு வேறு உறசில மொழி விளம்பினாள்' என்று மிக நுட்பமான கருத்துக்களைக் கம்பன் குறிப்பிடுகிறார். 'கருத்தொரு தன்மையது, உயிரும் ஒன்று, தம் அருத்தியும் அத்துணை ஆய நீரினார்; ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று எனப் பொருத்தினர் இவர், எனப் புல்லினர்; அரோ’’ என்றும், 'மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள், பிறப்பினோடு இறப்பெனப் பெயரும் சிந்தையாள்; துறப்பரு முகில் இடைத் தோன்றும் மின்எனப் புறப்படும்; புகும் ஒரு பூத்தகொம்பனாள்' என்றும் கம்பர் மிக அழகாகவும் மிக நுட்பமாகவும் குறிப்பிடுகிறார். இராமன் வந்த செய்தியும், அவன் வில் எடுத்த செய்தியும் சீதையின் திருமணச் செய்தியும் கேட்டு மிதிலை மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். கூட்டம் கூட்டமாகக் கூடி கும்பல் கும்பலாகக் கூடிப் பேசி மகிழ்கிறார்கள்.