பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 25 பெண்மை என்பது குளிர்ச்சி பொருந்திய காதலும் அன்பும் அருளும், பாசமும் மிக்கது, மென்மையானது. ஆயினும் மன உறுதி மிக்கது. மிதிலை மக்கள் சீன்தயென்னும் பெண்ணின் நீர்மையினால் பெறவிருக்கும் பெருமையை அடையப் போகிறோம் என்னும் மகிழ்ச்சியில் கூடிக் களிப்படைகிறார்கள். சீதையின் திருமணத்தைப் பற்றி வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். வில் எடுக்க ஆள் இல்லையே என்று ஏங்கி யிருந்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல நம்பிக்கையிழந்து நின்றார்கள். 'இன்று காலம் கனிந்து இனிய நாள் வந்து விட்டது” என்று மகிழ்ச்சி யடைந்தார்கள். மழையின்றி வானம் வறண்டு, பூமியில் நீர் இன்றி இருந்த காலத்தில் குடிப்பதற்கு நீர் நிறைந்த ஒரு இடத்தைக் கண்ட போது அங்கு மான் கூட்டம் குவியுமாம். அது போல மிதிலை மக்கள் கூட்டம் குவிந்தது என்று கம்பன் கூறுகிறார். 'கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம், இப் பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும்; என்பார்; மண்ணின் நீர் உலந்து, வானம் மறை அற வறந்த காலத்து உண்ணும் நீர் கண்டு வீழும் உழைக்குலம் பலவும் ஒத்தார்’ என்று கம்பன் பாடல் குறிப்பிடுகிறது. இராமனைக் காண மிதிலை மக்கள் கூடிக் குவிகிறார்கள். கண் இமைக்காமல் இராமபிரானின் தாள்களையும் தோள்களையும் அழகையும் அவன் கம்பீரத்தையும் காண மக்கள் கூட்டம் திரளுகிறது. அனைவரும் இராமனைப்பார்த்த வண்ணமாகவே இருக்கிறார்கள். 'அரத்தம் உண்டு அனைய மேனி அகலிகைக்கு அளித்த தாளும், விரைக்கரும் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும் வரைத்தடம் தோளும் காண, மறுகினில் வீழும் மாதர், இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ இனம் என்னல் ஆனார்' சிவந்த அழகிய மேனி கொண்ட அகலிகைக்கு உயிர் தந்த இராமனுடைய தாள்களையும் சீதைக்காக வில்லை ஒடித்து நிமிர்ந்து உயர்ந்து நிற்கும் அவனுடைய தோள்களையும் காண தேன் சிந்திய