பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 26 >}=== காதலும் பெருங்காதலும் இடத்தில் ஈக்கள் மொய்ப்பதைப் போல மாதர் கூட்டம் மொய்த்தது என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். இன்னும் அம்மக்கள் கூட்டத்தை, ‘'தோள் கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே; வாள் கொண்ட கண்ணார்யாரே வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்’ என்பது கவிஞர் பெருமான் கம்பநாடருடைய புகழ் பெற்ற பாடலாகும. ஆசை வெட்கமறியாது எனறு சாதாரண மக்களுடைய கருத்து ஒன்றுண்டு. 'பெருத்த காதலின் பேதுறு மாதரின் ஒருத்தி, மற்றங்கு ஒருத்தியை நோக்கி, என் கருத்தும் இவ்வழி கண்ட துண்டோ என்றாள் அருத்தி உற்றபின் நாணம் உண்டாகுமோ?” என்று கம்பன் பொதுவாக பெருங்காதல் கொண்டோர் நிலை பற்றி மிக அருமையாகக் குறிப்பிடுகிறார். இராமனுக்கும் சீதைக்கும் சிறப்பாகத் திருமணம் நடைபெற்று நிறைவேறியது. அனைவரும் சீதா ராமர்களை மணக்கோலத்தில் கண்டு பெரு மகிழ்சியடைந்தனர். "பூமகளும் பொருளும் என நீ என் மாமகள் தன்னோடு மன்னுதி' பூமகளும் பொருளும் போல நீங்கள் இணைந்து வாழுங்கள் என்று ஜனக மகா ராஜன் வாழ்த்தினார். நன் மகனுக்கு இவள் நல் அணி” என்று தாய் மார்கள் வாழ்த்தினர். மற்ற அனைவரும். 'எண்இல கோடி பொன், எல்லையில் கோடி வண்ண அரும் கலன் மங்கையர் வெள்ளம், கண் அகல் நாடு உயர், காசு உயர் தூசும், பெண்ணின் அணங்கனையாள், பெறு கென்றார்” என்று கம்பர் கூறுகிறார். இங்கு கம்பர் சீதா ராமர்களைச் சிறந்த தம்பதிகளாகச் சிறப்பித்துக் காட்டுகிறார் கடலளவில் நூல்களைக் கற்ற அறிஞர்களின் அறவுரைகளின்படி சிறந்த சாத்திரங்கள் கூறியுள்ள