பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 27 நெறி முறைகளின் படி பெருங்கடலைப் போன்ற அன்பையும் காதலையும் கொண்ட மனத்தினளான சீதையுடன் கரிய கடலைப் போன்ற கருணைக் கடலான இராமபிரான் இணைந்தான். 'நூற்கடல் அன்னவர் சொற்கடல் நோக்கி, மால் கடல் அன்ன மனத்தவளோடும் கார்க்கடல் போல் கருணைக்கடல், பண்டைப் பாற்கடல் ஒப்பது ஒர் பள்ளி அணைந்தான்” என்று மிக அருமையாக சீதா ராமர்களின் இணைப்பைப் பற்றிக் கவிஞர் பெருமான் பாடியுள்ளார். இங்கு காதல் சிறப்பு, திருமண நிகழ்ச்சி இருமனங்களின் இணைப்பு கற்பின் பெருமை முதலியவை பற்றி பல உயரிய கருத்துக்களைக் கம்ப நாடர் விவரிப்பதைக் காண்கிறோம். 5. கூனியும் சிறிய கோத்தாயும் அயோத்தியா காண்டத்தில் கூனியும் கைகேயியும் முக்கிய இடம் பெறுகின்றனர். இருவரும் பெண்கள். கைகேயி தசரத மன்னனுடைய மூன்றாவது மனைவி, இளையதாரம். அவளிடம் அவன் மட்டற்ற காதல் கொண்டிருந்தான். பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட தாரங்களைக் கொண்டவர்கள் இளைய தாரத்திடம் அதிகமான காதலும் மையலும் கொண்டிருப்பது இயல்பு என்பதைக் கதைகளிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, கண்டிருக்கிறோம். இக்காண்டத்தின் கதையில் கூனியும், சிறிய கோத்தாயும் இராமனுக்குக் கொடுமை இழைப்பதைப் பற்றிக் கூறப்படுகிறது. தசரத மன்னனுக்கோ தனது இளைய மனைவி செய்த கொடுமையைத் தடுக்க முடியாமல் போகிறது. அதனால் இராமன் காடு செல்ல வேண்டியதாகிறது. கம்பன் தனது மகா காவியத்தின் இரண்டாவது காண்டமான அயோத்தியா காண்டத்தின் கடவுள் வாழ்த்துப்பாடலாக