பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

UTV. சூம்பநாடன் காவியத்தில் 28 X-X=== காதலும் பெருங்காதலும் 'வான் நின்று இழிந்து வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பெங்கும், ஊனும், உயிரும், உணர்வும் போல, உள்ளும் புறத்தும்.உளன் என்ப கூனும், சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பச் கோல் துறந்து கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் காத்த கழல் வேந்தே' என்று பாடியுள்ளார். கன்னியர்கள் தங்கள் கற்பைக் காத்து வருவது அவர்களுக்குப் பெருமை தருகிறது. அதைப் போல ஆட்சியாளர்கள் ஆட்சிப் பொருப்புகளை தருமத்தின் வழியில் நடத்துவது பெருமைக் குரியதாகும். எனவே பெண்கள் தங்கள் கற்புநிலையைக் காத்து நிற்பதைப் போல தசரத மன்னன் தான் இம்மாநிலத்திற்குப் பெருமை தரும்படியாகத் தருமத்தைக் காத்து வந்ததாகக் கூறுகிறார். 'கன்னியர்க்கு அமைவரும் கற்பின் மாநிலம் தன்னை இத் தகைதர, தருமம் கைதர மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்; என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்’’ தசரதன் தன் சபையோர்களை அழைத்துக் கன்னியர்கள் தங்கள் கற்பைக் காத்துப் பெருமை அடைவதைப் போல நான் இந்நாட்டைக் காத்துத் தருமத்தைச் செய்தேன். இனி ஆட்சிப் பொருப்பைப் புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டுத் தவம் செய்து வீடுபேறு அடைய விரும்புகிறேன் என்று கூறுகிறார். இங்குக் கற்பின் பெருமை உவமையாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது. மனிதனுடைய உள்ளத்திலே உறைகின்ற உட்பகைகளாகக் காமத்தை முதலாவதாக வைத்துக் காமம், குரோதம், லோபம் மதம் மாற்சரியம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அப்பகைகளை வெல்ல வேண்டும் என்பதை நமது சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய உட் பகைகள் நம்மைச் சூழ்ந்து நிற்கின்றன. அவைகளை இடையறாது எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டும் என்பதையும் நமது சாத்திரங்கள் வலியுறுத்துகின்றன. தசரதன் தனது ஆட்சிப் பொருப்பிலிருந்து விலகி இந்த உட்பகைகளிலிருந்து ஒதுங்கி ஒய்வு பெற விரும்புகிறான். அதைப் பற்றித் தசரதன்.