பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் தீயவை யாவையினும் சிறந்த தீயாள் 31 இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்னும் திட்டத்தில் கூனி குறுக்கிட்டாள். கூனி என்னும் மந்தரை ஒரு பெண். கைகேயிக்கு மிக நெருக்கமானவள். கைகேயி மீது மிகவும் செல்வாக்கு கொண்டவள். இராமனுடைய முடி சூட்டு விழா பற்றிய செய்தியைக் கேட்டு அயோத்தி நகர மக்கள் எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆரவாரமாக இருந்த காட்சியில் “துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்’ என்று கம்பன் குறிப்பிடுகிறார். கூனியைப் பற்றிக் குறிப்பிடும் போது தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள்; ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்; கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்; மூன்றுலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்; என்றும் மற்றும் ‘வெகுளியின் மடித்த வாயினாள்” என்றும் இன்னும் ‘சூழ்ந்த தீவினை நிகர் கூனி’ என்றும் “கொடிய கூனி” என்றும், வேதனைக் கூனி' என்றும் “தீய மந்தரை” என்றும் “வினை நிரம்பிய கூனியை’’ என்றும் உள்ளமும் “கோடிய (வளைந்த) கொடியாள்’’ என்றெல்லாம் கம்பன் குறிப்பிடுகிறார். கூனி மிக நுட்பமான பாத்திரம். கூனியின் கொதிப்புரைகளைப் பற்றிக் கூறும்போது “தெழித்தனள், உரப்பினள் (கூச்சலிட்டாள், அதட்டினாள்) சிறுகண் தீ உக விழித்தனள், வெய்து உயிர்த்தனள், (வெந்து, பொருமி, பெருமூச்சுவிட்டாள்) அழித்தனள் (நிலத்திலுள்ள கோலங்களை அழித்தனள்) அழுதனள், அம்பொன் மாலையால் குழித்தனள் நிலத்தை' என்றெல்லாம் கம்பன் குறிப்பிடுகிறாள். கூனி, கைகேயியிடம் சென்ற போது அவள் துரங்கிக் கொண்டிருந்தாள் கூனி அவளை எழுப்பினாள். கம்பன் கைகேயியைப் பற்றி முதலில் 'தெய்வக் கற்பினாள்’ என்றும், 'துயவள்’ என்றும் குறிப்பிடுகிறார். கூனி கூறிய வஞ்சகக் கூற்றுகளுக்கு 'நீதி அல்லவும், நெறிமுறை அல்லவும் நினைந்தாய், ஆதி; ஆதலின் அறிவிலி, அடங்குதி'