பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 33 'அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும், உள்ளம் நஞ்சிலள், நாணிலள், என்ன நாணம் ஆமால், வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே தஞ்சென மாதரை உள்ளலார்கள் தக்கோர்’ என்றும் கம்பர் குறிப்பிடுகிறார். சீதை கேள்வன் போய் வனம் ஆள வேண்டும் என்ற மாத்திரத்திலேய நாகம் தீண்டியதைப் போல உணர்ந்து பாம்பு கடித்ததனால் துடிப்பு அடங்கிய வேழம் (யானை) போல தசரதன் வீழ்ந்தான். அதைக் கண்டும் எவ்வித இரக்கமும் காட்டாமல் எதற்கும் அஞ்சாமல் கைகேயி வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே நின்றாள்' என்று கம்பர் கூறுகிறார். இங்கு ஒரு மாது தனது கணவனது வீழ்ச்சிக்குக் காரணமாகிறாள். பெண்ணால் வந்தது அந்தரம் தசரதனுக்குக் கைகேயி மீது அளவு கடந்த அன்பும் காதலும் நிறைந்திருந்தது. ஆயினும் இராமனிடம் இருந்த புத்திர பாசம் அதிகம். 'மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் எனவே தனது அன்பு மனைவி கைகேயியிடம் கெஞ்சிக் கேட்கிறான். 'கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன், என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ? பெண்ணே வண்மைக் கேகயன் மானே! பெறுவாயேல் மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற; என்றான்' என்று தசரதன் கெஞ்சுகிறான். கைகேயி எதற்கும் அசையவில்லை. அதைப் பற்றி "தன்னேர் இல்லாத்தீயவள் உள்ளம் தடுமாறாள்' என்ற கைகேயியின் தடுமாற்றம் இல்லாத உள்ளத்தைக் குறிப்பிட்டுக் கம்பன் பேசுகிறார். தசரதன் மனம் கலங்குகிறான். அயர்வடைகிறான். மேலும் அதிகமாகத் தளர்ச்சியடைகிறான். ஆயினும் நச்சுத்தீயே பெண் உரு அன்றோ என்று எண்ணி நாணுகிறான். உன் மகன் நாடாளட்டும் இந்நிலமெல்லாம் உன் வசமாகட்டும். என் உயிரைப் போன்ற இராமனைக் காட்டுக்கனுப்பாதே. அவனைப் பிரிந்தால் நான் உயிர் வாழ மாட்டேன். நங்காய் உன் அபயம் என் உயிர்” என்று வாழ்வின் விளிம்பில் நின்று தசரதன் கெஞ்சிக் கெஞ்சிக் கைகேயியிடம் மன்றாடிக் கேட்கிறான். தன்னுடைய கணவனுடைய