பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.'s്fി ■ -M 35 חסם תפיתחוהם 'விண்தொட நிவந்த கோயில் வேந்தர் தம் வேந்தன் தன்னைக் கண்டிலன்; வினவக் கேட்டான்; கைகேயி கோயில் நண்ணித் தொண்டைவாய் மடந்தை மாரில் சொல்ல, மற்று அவரும் சொல்ல, பெண்டிரின் கூற்றம் அன்னாள், பிள்ளையைக் கொணர்க என்றாள்' என்று இங்கு கைகேயியைப் பெண்டிரின் கூற்றம் அன்னாள் என்று கம்பர் குறிப்பிடுகிறார். கைகேயி இராமனை அழைத்து வரச் சொல்கிறான். இராமன் வருகிறான். இராமனிடம் கைகேயி; 'ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த் தாழ் இரும் சடைகள் தாங்கித், தாங்கரும் தவ மேற்கொண்டு, பூழி வெம் கானம் நண்ணிப், புண்ணியத் துறைகள் ஆடி, ஏழிரண்டு ஆண்டில் வா என்று இயம்பினன் அரசன்; என்றாள்' என்று கூறுகிறாள். கம்பனுடைய இந்தப் பாடல் தமிழ் உலகில் மிகவும் புகழ் மிக்க பாடலாகும். இங்கு ஒரு அருமையான காட்சி நம்முன் காட்டப்படுகிறது. ஆழி சூழ் உலகம் தாழிருஞ் சடைகள், தவம், கானம், புண்ணியத் துறைகள் அடங்கிய ஒரு அற்புதமான காட்சியைக் கம்ப நாடர் நமக்கு முன்பு காட்டுகிறார். தன்னிடம் அரசனைத் தேடி வந்த சுமந்திரனிடம் கைகேயி 'பிள்ளையைக் கொணர்க’ என்று கூறினாள். இது பற்றிக் கம்பன் 'பெண்டிரின் கூற்றம் அன்னாள் பிள்ளையைக் கொணர்க’ என்றாள் என்று கூறுகிறார். சிற்றவைதானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள், அப் பொன்தட மகுடம் சூடப் பொதிது விரைவில் என்று இராமனிடம் போய் சுமந்திரன் கூறுகிறான். 'இராமனும் திருமாலைத் தொழுது அரச வெள்ளம் கடல் எனத் தன்னைத் தொடர தெய்வ கீதங்கள் பாடத் தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத் தையலார் இரைத்து நோக்கத்தார் அணித் தேரில் சென்றான். இராமன் தனது தேரில் அயோத்தியின் மாடவீதியில் செல்லும் போது மக்கள் பலரும் மகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள். கைகேயி அழைத்துள்ளாள் என்பதையும் கேள்விப்பட்டு மக்கள் உற்சாகமாகப் பேசிக் கொள்கிறார்கள்.