பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 37 கோலத்தைக் கண்டு கோசலை ஐயம் கொண்டு நீ நெடுமுடி புனைதற்கு இடையூறு ஏதேனும் உண்டோ என்று கேட்கிறாள். கோசலை களங்கமற்றவள். மக்கள் நால்வரிலும் எந்தவிதமான வேறுபாடும் காணாதவள் இராமனும் தூய சிந்தையுடன் தனது தாயிடம் “நின் காதல் திருமகன் பங்கமில் குணத்து எம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின்றான்' என்று தாயிடம் கூறுகிறான். கோசலையும் எந்த வேறுபாடும் காட்டாமல் 'முறைமை அன்றென்பது ஒன்றுண்டு; மும்மையின் நிறை குணத்தவன், நின்னினும் நல்லனால் குறைவிலன்; எனக்கூறினள் நால்வர்க்கும் மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றினான்” "என்று பின்னரும், மன்னவன் ஏவியது அன்று எணாமை, மகனே உனக்கு அறன்; நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து ஒன்றி வாழுதி, ஊழிபல; என்றான்” இவ்வாறு கூறி இராமனை வாழ்த்தினாள். அதன் பின்னர் இராமன் தனது தாயிடம் நான் நன்னெறி உய்ப்பதற்கு மற்றுமொரு பணியையும் மன்னவன் ஏவியுள்ளான்” என்று கூறினான் நான் ஏழிரண்டு ஆண்டுகள் காட்டிற்குச் சென்று திரும்ப வேண்டும் என்று கூறினான். அதைக் கேட்ட உடனே கோசலை துன்பமும் துயரமும் அடைந்தாள். அந்த வார்த்தைகள் அக்கினியைப் போல் அவளுடைய காதுகளில் விழுந்து, அவளைத் துன்புறுத்தியது. அவள் ஏங்கினாள், இளைத்தாள், திகைத்தாள், மனம் விங்கினாள், விம்மினாள், விழுந்தாள். அவளுடைய தாயுள்ளம் கலங்கியது 'வஞ்சமோ மகனே! உனை மாநிலம் தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம், நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ! அஞ்சும்! அஞ்சும்! என் ஆருயிர் அஞ்சும்! ஆல்” என்று கலங்கித் துடித்துப் பேசுகிறாள். தன் தாய்மை வயிற்றைப் பிசைந்து அழுது பெருமூச்சு விடுகிறாள், விழுங்குகிறாள். புழுங்குகிறாள் என்று கம்பன் குறிப்பிடுகிறார். கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள். இராமன் தாய்க்கு ஆறுதல் கூறுகிறான். தனது தாயை அருங்கற்பினோய்