பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 41 மாவும் குதிரைகளும்) அழுத என்று உலகின் அத்தனையும் அழுதன என்று கம்பனார் தனது கவிதைகளில் கண்கலங்கக் குறிப்பிடுகிறார். அயோத்தி மக்கள் தங்கள் மன்னனைப் பற்றி "ஆதி அரசன் அரும் கேகையன் மகள் மேல் காதல் முதிரக் கருத்தழிந்தான்’ என்று குறிப்பிடுகிறார்கள். காதல் முதிர்ந்து அது பெருங்காதலாகும் போது கருத்தும் அறிவும் அழிந்து விடுகிறது என்பதை மக்கள் திருவாக்காகக் கம்பன் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். பெண்ணாட்டம் ஒட்டேன் பரதனுக்கு நாடு இராமனுக்கு காடு என்னும் செய்தியைக் கேட்ட உடனேயே இலக்குவன் சீறியெழுந்தான், துடித்தான். இலக்குவன் ஆதி சேடனின் அவதாரம். அக்கிரமம் எங்கு நடந்தாலும் அதைச் சகிக்க மாட்டான், சீறி எழுவான். அதே சமயம் புலனடக்கமும் தியாக உணர்வும், அர்ப்பணிப்பும் நிறைந்தவன் இலக்குவனுடைய சீற்றத்தின் வேகத்தைக் குறித்து, 'கண்ணில் கடைத்தி உக; நெற்றியில் கற்றை நாற, விண்ணில் சுடரும் கெட, மெய்யினில் நீர் விரிப்ப உள்நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான்' என்று கம்பநாடர் மிக அருமையாகக் குறிப்பிடுகிறார். கொடுமையான செய்தியைக் கேட்ட இலக்குவன் நங்கைக்கு அறிவின் திறம் நன்றிது’ என்று கைகேயியைச் சாடுகிறான். தனது தந்தை தசரதச் சக்கரவர்த்தி பெண்ணாட்டம் அதிகம் கொண்ட காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டு விட்டது என்று கருதுகிறான். நான் இவர்களுடைய முடிவை முறித்து இராமனுக்கு முடிசூட்டுவேன் என்று கோபக்குரலில் பேசுகிறான். நான் இப்பெண்களின் கருத்துக்களுக்கு இடம் கொடுக்க மாட்டேன். யார் வந்தாலும் விட மாட்டேன் என்று பேசுகிறான். 'விண்ணாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர் மற்றும் எண் நாட்டவர், யாவரும் நிற்க ஒர் மூவராகி மண் நாட்டுனர், காக்குனர், நீக்குனர், வந்த போதும்; பெண்ணாட்டம் ஒட்டேன் இனிப்பேர் உலகத்துள்; அன்னா