பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- கம்பநாடன் . காவியத்தில் 42 2)== காதலும் பெருங்காதலும் என்று பேசுகிறான். கம்பன் இங்கு இலக்குவன் நிலையைப் பற்றி மிக அருமையாக விவரித்துக் கூறுகிறார். கோபமும் ஆவேசமும் கொண்ட இலக்குவனை இராமன் அமைதிப் படுத்துகிறான். நீண்ட அறிவுரைகளுக்குப் பின்னர் இலக்குவன் சீற்றம் தணிந்தான். இருவரும் சுமித்திரையிடம் சென்றனர். அங்கு இராமன் இலக்குவனிடம் தாய்மார்களும் தந்தையும் மிகவும் துயரம் அடைந்துள்ளனர் என்னையும் பிரிந்துள்ளனர். அவர்கள் மேலும் துன்ப மடையாதபடி நீ எனக்கு பதிலாக அவர்களுடன் இருந்து உதவுவாய்’ என்று கூறினான். 'அன்னையர் அனைவரும் ஆழ்வேந்தனும் முன்னையர் அல்லர், வெம்துயரில் மூழ்கினார்; என்னையும் பிரிந்தனர்; இடர் உறாவகை உன்னை நீ என் பொருட்டு உதவுவாய்' என்றான் என்று கேட்டுக் கொண்டான். இந்தச் சொற்களைக் கேட்டவுடன் இலக்குவன் திடுக்கிட்டான். அவன் எப்போதும் இராமனைப் பிரிந்ததில்லை. இலக்குவனின் தாய் சுமித்திரை கூட அவனிடம் 'மகனே இவன் பின் செல்தம்பி எனும் படியன்று அடியாரினும் ஏவல் செய்து மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வா, அதன்றேல் முன்னம் முடி’ என்றல்லவா அறிவுரை கூறி விடை கொடுத்தாள். இலக்குவன் இராமன் கூறிய சொற்களைக் கேட்டு மிகவும் வருத்தமுற்று இருப்பதால் தானே அதில் மீனும், அந்நீருக்கு நீலநிறமும் இருக்கிறது. தனு இருப்பதால் தானே அதற்குரிய நாரும் இருக்கிறது. யார் இருப்பால் நானும் சீதையும் உள்ளோம். அதைக் கூறுவாயாக’ என்று மனம் வருந்திக் கேள்வியை எழுப்புகிறான். கடைசியாக. “ஒரு பெண்ணுடைய சொல்கேட்டு நிலம் நடுங்கும்படி ஒரு கொடுஞ் செயலை நடத்தி உன்னைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையான ஒரு மன்னனுடைய மற்றொரு மைந்தன் தானே இவன் என்று என்னைப் பிரித்துப் புறக்கணித்து இவ்வாறு கூறுகிறாயா? என்று சுருக்கெனக் கேட்டான். அதற்கு மேல் இராமன் ஒன்றும் பேசவில்லை. கண்ணி நிறைந்த கண்களுடன் இருந்த இலக்குவனை இராமன் கண்டான். அமைதியானான். இலக்குவன் கூறிய சொற்கள் கம்பன் கவிதையின் படி,