பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 44 <-( =تحچّ காதலும் பெருங்காதலும் என்று கம்பர் பிரான் கூறும்படியாக அயோத்தியை விட்டு நீங்கி கானகம் செல்கிறான். இவ்வாறாக இராமபிரானுடைய அவதாரப் பெருமைகளைக் கூறும் ஒரு அற்புதமான தெய்வீக நாடகத்தின் ஒரு பகுதி நிறைவு பெறுகிறது.

  • து. *** ** **

ர் 7. வனவாசம் தொடங்கியது இராமபிரானின் வனவாசம் தொடங்கியது. மூவரும் குகனை சந்தித்துக் கங்கையைக் கட்ந்துப் பரத்துவாசன் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கு ஒரு நாள் தங்கி விட்டுச் சித்திர கூட பர்வதத்தின் அருகில் சென்றனர். அங்கு சூழ்ந்திருந்த அற்புதமான அழகிய ரம்யமான இயற்கைக் காட்சிகைளை இராமபிராமன் சீதாபிராட்டிக்குக் காட்டி மகிழ்ந்தார். இராமனும் சீதையும் ஒருவருக்கொருவர் அளவுக்குமேல் நேசித்தனர். அன்பும் காதலும் கொண்டிருந்தனர். இராமன் சீதையை ‘ஒருவில் பெண்மை என்றும் உறைக்கின்ற உடலினுக்கு உயிரே" என்றும் மடந்தை மார்க்கு ஒரு திலகமே” என்றும் குழுவு நுண்துளை வேயினும் குறிநரம்பு எறிவுற்று எழுவு தள் தமிழ்யாழினும் இனிய சொல் கிளியே” என்றெல்லாம் குறிப்பிட்டு கானகத்தில் உள்ள பறவையினங்களும் வண்டினங்களும் விலங்கினங் களும் சேர்ந்து மகிழ்ந்து இருப்பதை மகிழ்ச்சியுடள் எடுத்து கூறுகிறான். மேலும் சீதை காட்டு வழியே நடந்து செல்வதால் அவளது கால்கள் துன்பம் அடைந்தன. இலக்குவன் பர்னக சாலையை அமைக்க அரும் பணியாற்றிய போது அவனுடைய கைகள் துன்பமடைந்தன என்று குறிப்பிட்டு வருத்தப்படுகிறான். 'மேவு கானம் மிதிலையர் கோன் மகள் பூவின் மெல்லிய பாதமும் போந்தன; தாவில் எம்பிகை சாலை சமைத்தன; யாவை யாதும் இலார்க்கு இயையாதவே' என்று கம்பன் குறிப்பிடுகிறான். யாதும் இலார்க்கு அதாவது ஏழ்மையடைந்தவர்களுக்கு இப்படிப்பட்டத் துன்பங்கள் ஏற்படுகின்றன என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.