பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_சினிவாசன் 45 பதன் இராமனைத் தேடிக்கொண்டு வனத்தை நோக்கித் தன் பா கரு ன் புறப்படுகிறான். குகனை சந்தித்து அவன் உதவியால் கங்கையைக் கடக்கிறான். பரத்துவாசனுடைய ஆசிரமத்தில் தங்கி விட்டு மறுநாள் காலை இராமன் தங்கியிருக்கும் இடத்தை நோக்கிப் பதம் தன்படை சூழச் செல்கிறான். இலக்குவன் தூரத்திலிருந்து ஒரு குன்றின் மேலிருந்து பதனையும் அவனுடைய படைகளையும் காண்கிறான். பரதன் மீது சந்தேகப் படுகிறான். இராமன் மீது போர் தொடுக்கவே இப்பெரும் படைகளுடன் வருகிறான் என்று தவறாகக் கருதுகிறான். இராமனிடம் வேகமாகச் சென்று மதித்திலன் பரதன் நின் மேல் வந்தான் மதிள் பதிப்பெரும் சேனையின் பரப்பினான்’ என்று கூறுகிறான். மேலும் 'ஒரு மகள் காதலின், உலகை நோய்செய்த பெருமகன் ஏவலின், பரதன் தான் பெறும் இருநிலம் ஆள்கைவிட்டு, இன்றறென் ஏவலால் அருநரகு ஆள்வது காண்டி ஆழியாய்!” என்றும் இலக்குவன் கூறுகிறான். ஒரு பெண்ணின் மீது வைத்திருந்த பெருங்காதலால் இந்த - லகைத் துன்புறுத்திய பெருமகன் அந்தத் தசரதன், அவன் ஏவலால் பதன் நம் மீது படை எடுத்து வருகிறான். அவனை இவ்விரு நிலமும் ஆளவிடாமல் அருநரகு அனுப்பிவைக்கிறேன் பார்’ என்று இலக்குவன் கடுங்கோபத்துடன் இராமனிடம் பேசுகிறான். இங்கு மீண்டும் இலக்குவன் தசரதனைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த பெருமகன்' ஒரு பெண்ணின் மீதுவைத்திருந்த பெருங்காதலால் உலகைத் துன்புறுத்திய பெருமன்னன் என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். மாதரால் வந்த செய்கை இராமனும் சீதையும் இலக்குவனும் காடுகள், ஆறுகள், மலைகள் பலவற்றையும் கடந்து தங்கள் பயணமாக வந்து கொண்டிருந்தனர். வழியில் சடாயு என்னும் கழுகு வேந்தனைக் கண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகித் தெரிந்து கொண்டனர்.