பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கம்பநாடன் காவியத்தில் 46 تدخلإصلاح காதலும் பெருங்காதலும் கழுகரசன் தசரதனுக்கு உற்ற நண்பன், இளைய சகோதரனைப் போன்றவன். இராம இலக்குவர்களை தசரதன் மைந்தர் என்று கேள்விப் பட்டவுடன் அவர்களை அன்புடன் தழுவிக் கொண்டான். தசரதனுடைய நலனையும் நல்லாட்சியையும் பற்றி வினவினான். தசரதன் காலமாகி விட்டான், என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு மனம் வருந்தினான். வேந்தன் விண் அடைந்துவிட்டான் என்றால் நீங்கள் நாட்டை ஆளாது காட்டிற்கு வந்தக் காரணம் என்னவென்றுக் கழுகரசன் கேட்டான். இராமன் நேடிரயாக அக்கேள்விக்குப் பதில் கூறாமல் தம்பியை நோக்கினான். இலக்குவன் 'மாதரால் வந்த செய்கை’ என்று நடந்த கதை முழுவதையும் விவரமாக எடுத்துக் கூறினான். அதைப்பற்றி, 'தாதை கூறலும், தம்பியை நோக்கினான் சீதை கேள்வன்; அவனும், தன் சிற்றவை மாதரால் வந்த செய்கை, வம்பிலா ஒத வேலை ஒழிவின்று உணர்த்தினான்” என்பதைக் கம்பன் தனது கவிதை மூலம் உணர்த்தியுள்ளான். கோதாவரிக் கரையில் சடாயுவைச் சந்தித்துக் கலந்து கொண்ட பின்னர் மூவரும் கோதாவரி என்னும் தெய்வத்திரு நதியின் அழகையும் அதன் கரைகளின் செழிப்பையும் கண்டு வியந்தனர். இங்கு ஒரு அற்புதமான காதல் காட்சியைக் கம்பன் காட்டுகிறார். கோதாவரிக் கரையின் நீர் நிலையில் அன்னப்பறவைகள் நீந்தி விளையாடி ஒதுங்கின. அதைக் காணும் இராமன் அன்னத்தின் நடையைக் கண்டு விட்டு சீதையின் நடையைக் கண்டு புன்முறுவல் செய்தான் என்றும் சீதையும் அக்கோதாவரியில் வந்து நீர் உண்டு மீளும் யானைகளின் நடையைக் கண்டு இராமனை நோக்கி முறுவல் பூத்தாள் என்றும் கம்பநாடர் கூறுகிறார். 'ஒதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன், உழையள் ஆகும், சீதை தன் நடையை நோக்கிச் சிறிய தோர் முறுவல் செய்தான்; மாதவன் தானும், ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள்' (ஒதிமம்-அன்னப்பட்சி, போதகம்-ஆண்யானை) என்பது கம்பனுடைய அற்புதமான பாடலாகும் மேலும் o