பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் "நூபுரமும், மேகலையும், நூலும், அறல் ஒதிப் பூமுரலும் வண்டும், இவை பூசலிடும் ஒசை தாம் உரை செய்கின்றது ஒரு தையல் வரும்; என்னாக் கோமகனும் அத்திசை குறித்து எதிர் விழித்தான்' என்று கம்பன் குறிப்பிடுகிறார். இவ்வாறு வானத்திலிருந்து இரங்கி வரும் ஒரு அப்சரஸைப் போல சூர்ப்பனகை வருகிறாள். அவளுடைய உள்ளத்தில் பெரும் காதல் மிகுந்தக் காம உணர்வு மேலோங்கி நிற்கிறது. இந்தக் காட்சி ஒரு அபூர்வமான ஒருதலைக் காதல் காட்சியாகும். இராமனிடம் வந்து நின்னைக் காணவந்தேன் என்று சூர்ப்பணகை கூறுகிறாள். 48 “மகளிருடைய சிந்தனையை அவர்களுடைய உள்ளத்தை அறிதல் கடினமானது. நல்ல நோக்கத்தில் அவள் வந்திருப்பதாகத் தெரியவில்லை. அது பற்றி பின்னால் தான் தெரியவரும்’ என்று நினைத்துத் தன்பால் வந்த காரணத்தைச் சொல்லுமாறு அவளிடம் இராமன் கேட்கிறான். “தாம் உறு காமத்தன்மை, தாங்கன் நேர் உரைப்பது என்பது ஆம் எனல் ஆவது அன்றால் அருங்குல மகளிர்க்கு, அம்மா! ஏமுறும் உயிர்க்கு நோவேன்! என் செய்கேன்! யாரும் இல்லேன் காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி! என்றான்' என்று காமவல்லி என்று தன் பெயரைக் கூறிச் சூர்ப்பனகைத் தனது காம உணர்வை இராமன்மீதுள்ள தனது ஆசையை வெளிப்படுத்துகிறான். அவ்வாறு அவள் கூறிய போது'நாண் இலள், ஐயள், நொய்யள், நல்லளும் அல்லள்” என்று இராமன் தன் மனதில் எண்ணுகிறான். நேரடியாக இராமன் எதுவும் கூறவில்லை. அதைக் கண்டு அவள், “என் மீது உங்களுக்கு ஆசை உண்டோ” என்று வினைவுகிறாள். 'பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஒராள் பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம் மகள் புகன்ற என் கண் ஆசை கண்டு அருளிற்று உண்டோ, அன்றெனல் உண்டோ? என்னும் ஊசலின் உலவு கின்றாள்; மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள்' என்று சூர்ப்பனகை கூறுகிறாள். இவ்வாறு இருவருக்கும் உரையாடல் தொடருகிறது. அவளை நீ யார் என்றும் உன் பெயரென்ன