பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 49 என்றும் கேட்ட போது பிரம தேவனுடைய புதல்வனாகிய புலத்திய னுடைய மைந்தனான விச்சிர வசுவின் மகள் குபேரனுடைய தங்கை, திசை யானைகளையெல்லாம் வென்று வெள்ளி மலையெடுத்து உலகம் மூன்றையும் ஆண்டு கொண்டிருப்பவனுக்குப் பின் தோன்றியவள், காமவல்லி என்பது எனது பெயர் என்று கூறியிருந்தாள். பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி; முப்புரங்கள் செற்ற சேவலான் துணைவனான செங்கையோன் தங்கை, திக்கின் மாவெல்லாம் தொலைத்து வெள்ளி மலை எடுத்து உலகம் மூன்றும் காவலோன் பின்னை காமவல்லியாம் கன்னி; என்றாள், என்பது கம்பன் பாடல். "உன்னுடன் உடன் பிறந்தவர்களில் ஒருவன் மூன்று உலகங்களுக்கும் உயர்ந்த ஒப்பற்ற தலைவன், மற்றொருவன் குபேரன் அவர்கள் வந்து உன்னைத் தந்தால் ஏற்கலாம். இல்லாவிட்டால் நீ வேறு இடத்தைப் பார்த்துக் கொள்’ என்று வேடிக்கையாக இராமன் கூறினான். “ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஒங்கொரு தலைவன், ஊங்கில் ஒருவனோ குபேரன், நின்னோடு உடன்பிறந்தவர்கள்; அன்னார் தருவரேல் கொள்வேன்; அன்றேல் தமியை, வேறிடத்துச் சார, வெருவென் நங்கை !! என்றான்; மீட்டு அவள் இனைய சொன்னாள்” என்பது கம்பநாடன் பாடல். அப்போது சூர்ப்பனகை ஆண் பெண் உறவு கொள்வது பற்றிய ஒரு நெறிமுறையும் நடைமுறையும் பற்றி வேதங்களை ஆதாரம் காட்டி எடுத்துக் கூறுகிறாள். இங்கு கம்பன், மிகவும் நுட்பமாக அக்கருத்துக்களை சூர்ப்பனகை எடுத்துக் கூறுவதைக் குறிப்பிடுவதைக் காணலாம். “காந்தர்ப்பம் என்பது உண்டால், காதலில் கலந்த சிந்தை மாந்தர்க்கும் மடந்தை மார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம், ஏந்தல் பொன் தோளினாய்! ஈது இயைந்த பின், எனக்கு மூத்த வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும்; வேறு ஒர் உரை உண்டு' என்றாள். மேலும்,