பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 52 دخلإصلإح - காதலும் பெருங்காதலும் 'விண்டாரே அல்லாரோ வேண்டாதார்; மனம் வேண்டின் உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ ! கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ கொண்டாரே கொண்டாடும் உருப்பெற்றால் கொள்ளிரோ!' என்று தனது தாபத்தைக் கூறி மேலும் வாதாடுகிறாள். சிவனும், மலர்த்திசை முகனும், திருமாலும் தெறு குலிசத்து அவனும், (வஜ்ஜிராயுதத்தைக் கொண்ட இந்திரனும்) அடுத்து ஒன்றாகி நின்றன்ன உருவோனே! புவனம் அனைத்தையும் ஒரு தன் பூங்கணையால் உயிர் வாங்கும் அந்த மன்மதனும் உனக்கு இளையானோ! இவனே போல் அருள் இலனால்’’ என்பது கம்பன் பாடல். 'உனக்கு இளையானான இலக்குவன் என் அங்கங்களை அறுத்து அவமானப்படுத்தினான். மன்மதனும் அவனுடைய கணைகளால் என் உயிரை வாங்குகிறான். எனவே அந்த மன்மதனும் இலக்குவனைப் போல் உனக்கு இளையோனோ’ என்று கூறி அழுகிறாள். இன்னும் சூர்ப்பணகையின் காம வெறி அவளுக்கு இராமன் பால் ஏற்பட்டிருந்த பெருங்காதல் வெறிமேலும் அதிகமாகி தலைக்கேறுகிறது. அவள் இராமனுடைய காதலுக்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறாள். 'என்னோடு இங்கு தங்குவீர்” என மீண்டும் இராமனை வற்புறுத்துகிறாள்'. அப்போது மீண்டும் இராமன் சூர்ப்பண கைக்கு நல்ல வார்த்தைகளைக் கூறி அந்த இடத்தைவிட்டு அகலும்படி அறிவுறுத்தினான். நாங்கள் தசரதன் புதல்வர்கள். தாய் சொல்தாங்கி வனம் புகுந்தேம். இங்கு வேதியரும் மாதவரும் வேண்ட உலகிற்குக் கொடுமை இழைத்து வரும் அரக்கர் குலங்களை அழித்து எங்கள் நகர் புகுவோம் என்பதை மனதில் கொள்வாயாக' என்று பொருள் பொதிந்த வார்த்தைகளை எடுத்துக் கூறி சூர்ப்பண கைக்கு அறிவுரை கூறுகிறான். அது ஒரு எச்சரிக்கையாகவும் அமைகிறது. 'தரை அளித்த தனி நேமித்தயரதன் தன் புதல்வர்யாம், தாய் சொல் தாங்கி,