பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 53 விரை அளித்த கான்புகுந்தோம்; வேதியரும் மாதவரும் வேண்ட நீண்டு கரை அளித்தற்கு அரிய படைக்கடல் அரக்கர் குலம்தொலைத்துக் கண்டாய பண்டை வரையளித்த குலமாட நகர் புகுவேம் ! இவை தெரிய மனம் கொள்' என்றான் இந்த எச்சரிக்கையைக் கேட்ட பின்னரும் சூர்ப்பனகை தனது பெருங்காதல் வெறியில், இந்தக் காடுகளில் வாழும் அரக்கர்களைப் போர் தொடுத்து அழிப்பது தான் உங்கள் குறிக்கோளாயின் நான் உனக்குச் சகல வழிகளிலும் உதவி செய்கிறேன். அரக்கர்களின் பொறிகள் அனைத்தையும் அறிவேன். பாம்பின் கால் பாம்பறியும் இந்த சீதையைக் கைவிட்டு என்னை ஏற்று கொள்ளுங்கள் என்று கூறுகிறாள். என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நான் உங்களை அழித்து விடுவேன் என்று சூளுரைத்துத் தனது சகோதர உறவுகளான கர துடனர்களிடம் செல்கிறாள். சூர்ப்பனகையின் ஒருதலையான பெருங்காதல் காரணத்தால் பெரிய நாசகரமான போர்களும் அரக்கர் படை அழிவுகளும் விளைகின்றன. சூர்ப்பனகையின் வரவும் அவள் இராம இலக்குவர்களைக் கண்டதும் அவர்கள் பால் பெருங்காதல் கொண்டதும் இவை தொடர்பான இதர நிகழ்ச்சிகளும் இராமாயணக் காவியத்தில் மிகப் பெரிய திருப்பங்களை உண்டாக்குகின்றன. சூர்ப்பணகையின் பெருங்காதல் உணர்வும் மோகத்தின் வேகமும் கடைசிவரை குறையவில்லை. சீதை இராமனுடன் இருக்கும் வரை தான் இராமனை அடைய முடியாது என்று முடிவுக்கு வருகிறாள். எனவே சீதையைப் பற்றி இராவணனிடத்தில் வத்தி வைத்து அவனுடைய உள்ளத்தில் சீதையைப் பற்றிய பெருங்காதல் தீயைப் பற்றவைத்து விட முடிவு செய்கிறாள். காவியத்தில் அத்துடன் சூர்ப்பனகையின் பாத்திரக் கடமை முடிகிறது. சூர்ப்பனகையின் பெருங்காதல் உணர்வு நிலை இராமாயண காவியத்தில் ஒரு முக்கியமான காவிய நிகழ்ச்சியாகும் இந்த அபூர்வமான நிகழ்ச்சியைக் கம்பநாடர் எடுத்துக் காட்டி விவரிப்பது நாம் படிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் மிகவும் நுட்பமான விவரங்களைக் கொண்டதாகும்.