பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 54 2)=> காதலும் பெருங்காதலும் கரதுTடணர் சூர்ப்பனகை, அக்காட்டில் இருந்தத் தனது சகோதர உறவினர் களான கரதுடனர்களிடம் வந்து முறையிடுகிறாள். "இருவர் மானிடர், தாபதர், ஏந்திய வரிவில் வாட் கையர், மன்மதன் மேனியர்; தரும நீரர்; தயாதன் காதலர் செருவில் நேரும் நிருதரைத் தேடுவார்.' என்று கூறுகிறாள். I போர்க் களத்தில் சந்திப்பதற்கு அரக்கர்களைத் தேடுகிறார்கள் என்று சண்டையைத் துண்டிவிடும் நேரத்திலும் இருவர் மானிடரைப் பற்றி தாபதர் மன்மத மேனியர் தரும வீரர், தயாதன் காதலர் என்று குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கது. மேலும் சீதையின் அழகையும் விவரித்துக் குறிப்பிட்டு அவளை இலங்கையர் கோனுக்குக் கொண்டு செல்ல முயன்ற போது தான் மூக்கறுப்பட்டதைக் குறிப்பிட்டு அந்த மானிடர் மீது பகையைத் தூண்டுகிறாள். "மண்ணின், நோக்கரும் வானினின், மற்றினில், எண்ணி நோக்குறின், யாவர்க்கும் நேர்கிலாப் பெண்ணின் நோக்குடையாள்; ஒருபேதை, என் கண்ணின் நோக்கி உரைப்பரும் காட்சியாள்' என்றும். கண்டு நோக்கரும் காரிகையாள் தனைக் கொண்டு போவல் இலங்கையர் கோக்கு, எனா விண்டு மேல் எழுந்தேனை, வெகுண்டு அவர் துண்டம் ஆக்கினர் மூக்கு'எனச் சொல்லினாள் என்றும் கம்பன் மிகவும் சுவையாகக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். இவ்வாறு சூர்ப்பனகை கரனிடத்தில் கூற கரதுடனர்களும் அவர்களுடைய அரக்கர் படைகளும் இராமனைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். இராமன் இவர்கள் அனைவரையும் வீழ்த்தினான். முனிவர்கள் இராமனை மகிழ்ச்சியுடன் சூழ்ந்து கொண்டனர்.