பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 55 இராமனும் மகிழ்ச்சியுடன் தன் உயிருக்கு உயிரான சீதைபால் சென்றான். அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும் (சீதையும்) கண்ணின் நீரினில் பாதம் கழுவினர்’ என்று கம்பர் குறிப்பிடுகிறார். கரதுடனர்களை எதிர்த்து நடந்த போரில் இராமன் தனியாக நின்று அவ்வரக்கர்கள் அனைவரையும் கொன்று வெற்றிக் கண்டான். அப்போதும் இராமனுடைய எண்ணம் முழுவதும் சீதையின்பால் இருந்தது என்றும் இராமனை உடலாகவும் சீதையை உயிராகவும் கம்பர் கூறுகிறார். 'முனிவர்வந்து முறை முறை பொய்ப்புற, இனிய சிந்தை இராமனும் ஏகினான், அணிக வெம் சமத்து ஆருயிர் போகத்தான் தனியிருந்த உடல் அன்னதையல் பால்’’ விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியின் புண்ணின் நீரும், பொடிகளும் போய்உக, அண்ணல் வீரனைத் தம்பியும், அன்னமும் கண்ணின் நீரினில் பாதம் கழுவினார். என்பன கம்பருடைய பாடல்கள். இலங்கை சென்றாள் கரது டணர்கள் கொல்லப்பட்ட பின்னர் சூர்ப்பண கை இராவணனிடம் ஓடினாள். இதைப் பற்றிக் குறிப்பிடும் போது 'ஆக்கினேன் மனத்து ஆசை அவ்வாசை என், மூக்கினோடும் முடிய முடிந்திலேன் என்று இராமன் மீது தனக்கிருந்த ஆசையையும் நினைத்துக் கொண்டு இலங்கைக்கு வேகமாகச் சென்றாள். அவள் இலங்கைக்கு வரவிருக்கும் செய்தியைப் பற்றிக் கூறும் போது இராமனிடம் அவளுக்கிருந்த மிகுந்த ஆசையைப் பற்றிக் கம்பநாடர் குறிப்பிடுகிறார். 'இரைத்த நெடும் பணை அரக்கர் இறந்ததனை மறந்தனள், போர் இராமன் துங்க வரைப் புயத்தின் இடைக்கிடந்த பேராசை மனம் கவற்ற, ஆற்றாள் ஆகித்