பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கம்பநாடன் காவியத்தில் 56 تدخلإصلاح காதலும் பெருங்காதலும் திரைப் பரவைப் பேர் அகழித்திண் நகரில் கடிதோடிச் சீதை தன்மை உரைப்பன் எனச் சூர்ப்பனகை வர இருந்தாள், இருந்த பரிசு உரைத்தும்; மன்னோ' என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். சூர்ப்பனகை அறுபட்ட மூக்கு காதுகளுடன் இராவணன் முன்பாகச் சென்றாள். அவளுடைய நிலை கண்டு இராவணன் கடுங் கோபம் கொண்டான். அவனுடைய வாயில் புகை கிளம்பியது. மீசைகள் துடித்தன. இது யாவர் செயல், எனக் கேட்டான். அப்போதும் சூர்ப் பணகை கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார், மீனுடை நெடுங் கொடியினோன் அனையர், உவமையில்லா மானிடர், தடிந்தனர் வாள் உருவி,” என்று கூறினாள். உவமையில்லா மானிடர்” என்ற அவள் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. இன்னும் இராமனையும் இலக்குவனையும் பற்றி அவள் தன் அண்ணனிடம் கூறுகிறாள். “மன்தமனை யொப்பர் மணி மேனி, வட மேருத் தன் எழிலை ஒப்பர் திரள் தோளின் வலி தன்னால் என் அதனை இப்பொழுது இசைப்பது? உலகேழின் நல் மதம் அழிப்பர் ஒர் இமைப்பின் நனி வில்லால்,' “வந்தனை முனித்தலைவர் பால் உடையர் வானத்து இந்துவின் முகத்தர், எறி நீரில் எழும் நாளக் கந்தமலரைப் பொருவு கண்ணர், கழர், கையர்; அந்தமில் தவத் தொழிலர், ஆர் அவரை ஒப்பார்? இன்னும், “வற்கலையர் வார் கழலர்; மார்பின் அணி நூலர்; விற்கலையர்; வேதம் உறை நாவர்; நனி மெய்யர்; உற்கு அலையர்; உன்னை ஒர் துகள் துணையும் உன்னார்; சொல்கலையெனத் தொலைவில் துணிகள் சுமந்தார்; “மாரர் உளரே இருவர். ஓர் உலகின் வாழ்வார் வீரர் உளரே அவரின் வில்லதனின் வல்லார் ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள்? ஐயா ஒர் ஒருவரே முதல்வர் மூவரையும் வெல்வார்”