பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 57 “ஆறுமணம் அஞ்சினம் அரக்கரை, எனச் சென்று ஏறு நெறி அந்தணர் இயம்ப, உலகெலாம் வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்கிக் கோறும் என முந்தை ஒரு சூழ் உறவு கொண்டார்.” “தராவலய நேமி உழவன் தயரதப் பேர்ப் பராவரு நலத் தொருவன் மைந்தர்; பழியில்லார் விரா வருவனத்து விளம்ப உரைகின்றார்; இராமனும் இலக்குவனும் என்பர் பெயர்’ என்றாள் என்றெல்லாம் அவள் விவரித்துக் கூறுகிறாள். இந்த வார்த்தைகளிலிருந்து அவளுடைய உள்ளக்கிடக்கை தெளிவாக வெளிப்படுகிறது. சூர்ப்பனகை இராமன் மீதுள்ள பெருங்காதலின் அடர்த்தியை, ஆழ் நீளத்தை, பொங்கி எழும் தாபத்தை மிக அழகாக அற்புதமாகக் கம்பர் விளக்கிக் கூறுவதைக் காண்கிறோம். இராமனை அடைவதற்கு சீதை இடையூறாக இருக்கிறாள். எனவே சீதையை அந்த இராமனிடமிருந்து பிரித்து விட வேண்டும் என்பதும் அவளுடைய குறிக்கோளாக வெளிப்படுகிறது. அதற்காக இராவணனுக்கும் இராமனுக்குமிடையில் ஒரு அரசியல் பகையையும் உண்டாக் கி விட வேண்டும் என்பதற்காக இராம இலக்குவர்களுடைய சிறப்புகளையெல்லாம் விவரித்து அவர்கள் மீது ஒரு பொறாமை உணர்வை உருவாக்கி வெறுப்பைத் தோற்றுவித்து இராவணனுடைய, தான் என்னும் தனியாண்மையையும் தன்மானத்தையும் துண்டி விட்டுப் பேசுகிறாள். “ஆறுமணம் அஞ்சினம் அரக்கரை எனச் சென்று ஏறு நெறி அந்தணர் இயம்ப; உலகெல்லாம் வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்கக் கோறும் என முந்தை ஒரு சூழ் உறவு கொண்டார்” என்று உங்கள் குலம் முழுவதையும் வேரோடு அழிக்கச் சூழுரைத்துக் கொண்டுள்ளனர் என்றும் பகையை மூட்டியும் பேசுகிறாள். அடுத்து சீதை மீது இராவணனுக்கு ஒரு அடங்காத பெருங்காதலை உண்டாக்க வேண்டும், அதற்கான முன்னுரையாகவும் மனதில் கொண்டு சூர்ப்பனகை பேசுவதாகவும் அமைந்துள்ளது.