பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

வருகிற மற்றைக் காண்டங்களையும் இதே ரீதியில் அச்சிட்டு வெளியிடுவோம்.

நாம் பதம் பிரித்திருக்கிற மாதிரியைப் பற்றி இங்கே சில வார்த்தைகள் சொல்லுவது அவசியமென நினைக்கிறோம். ஆங்கிலம் முதலிய மேல் நாட்டுப் பாஷைகளில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறதும், தமிழில் வசன நடை இப்பொழுது சகஜமாய்ப் போய் விட்டதுமான நிறுத்துக் குறிகளை நாம் காவியத்தின் உள்ளே தாராளமாக உபயோகப்படுத்தியிருக்கிறோம். சிலவிடங்களில், முக்கியமாய் நூலின் முற்பகுதியில் பொருளில் சந்தேகம் வராதிருக்க வேண்டும் என்று வசன நடையில் போடவேண்டிய குறிகளுக்கு மேலேயே கூடக் குறிகள் போட்டிருக்கிறோம். வல்லினம் இரட்டிருக்கிற இடங்களில் நிறுத்தம் ஏற்படும் போது வாட்குறி*[1] மாத்திரம்தான் போட்டிருக்கிறோம். இரட்டிக்கும் மெய்யை எழுதவில்லை.

புணர்ச்சிகளையும், பொருள் விளங்குவதற்கு எத்தனை தூரம் பிரிக்கலாமோ அத்தனை தூரம் பிரித்தே எழுதியிருக்கிறோம். உதாரணமாக எங்குலத் தலைவர்கள், அருந்தவ முனிவர், அளப்பருங்காலம் என்ற மொழித் தொடர்களை எம் குலத் தலைவர்கள், அரும் தவ முனிவர், அளப்பு அரும் காலம் என்றேதான் எழுதியிருக்கிறோம். Ş[2] றன்னகரமும் தகரமும் புணருமிடத்து றகரம் இரட்டித் திருப்பதைப் பிரித்தெழுதும்போது, முதல் மொழி இரண்டாம் வேற்றுமையாக இருக்கையில் றன்ன-


  1. 🞸 , என்னும் குறி உடைவாள் போலிருப்பதாலும், அது வாக்கியத்தை இடையில் வெட்டுவதாலும் அதற்கு வாட்குறி என்று பெயர் கொடுத்திருக்கிறோம்.
  2. Ş ஆனால் எங்கெங்கே சந்தி பிரித்தால் பொருளில் சந்தேகம் வருமோ, அல்லது தெளிவு குறையுமோ, அங்கேயெல்லாம் புணர்ச்சியைப் பிரிக்கவில்லை.